அமரனுக்கு வந்த பிரச்சனை.. 4000 போன்.. கதறிய மாணவன்.. முடித்துவிட்ட படக்குழு.. ஆனா.. இனி என்ன நடக்கும்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அமரனுக்கு வந்த பிரச்சனை.. 4000 போன்.. கதறிய மாணவன்.. முடித்துவிட்ட படக்குழு.. ஆனா.. இனி என்ன நடக்கும்?

அமரனுக்கு வந்த பிரச்சனை.. 4000 போன்.. கதறிய மாணவன்.. முடித்துவிட்ட படக்குழு.. ஆனா.. இனி என்ன நடக்கும்?

Malavica Natarajan HT Tamil
Dec 10, 2024 08:33 AM IST

அமரன் படத்தில் என்னுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தியதாகக் கூறி கல்லூரி மாணவர் தொடர்ந்த வழக்கில் படத்தின் தயாரிப்பு குழு சில மாற்றங்களை செய்துள்ளது.

அமரனுக்கு வந்த பிரச்சனை.. 4000 போன்.. கதறிய மாணவன்.. முடித்துவிட்ட படக்குழு.. ஆனா.. இனி என்ன நடக்கும்?
அமரனுக்கு வந்த பிரச்சனை.. 4000 போன்.. கதறிய மாணவன்.. முடித்துவிட்ட படக்குழு.. ஆனா.. இனி என்ன நடக்கும்?

வழக்கு தொடர்ந்த மாணவன்

இந்நிலையில், படம் வெளியான சில நாட்களில் சாதிப் பிரச்சனை உள்ளிட்ட சில அமரன் படத்திற்கு எதிராக வந்த சமயத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் அமரன் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். காரணம். அமரன் படத்தில் இந்து ரெபேகா வர்கீஸாக நடித்திருந்த சாய் பல்லவி பயன்படுத்தியது இந்த சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவரின் மொபைல் எண்ணைத் தான்.

பாடல் காட்சியில் இடம்பெற்ற மொபைல் எண்

தன் காதலர் முகுந்தனுக்கு தன் செல்போன் எண்ணை காகிதத்தில் எழுதி தூக்கிப் போடுவார். இந்தக் காட்சி ஹே மின்னலே பாடலின் ஒரு பகுதியாக வரும். இந்த காட்சியில் இந்துவின் செல்போன் எண் முழுவதுமாக காட்டப் பட்டிருக்கும். இதுதான் அந்த இளைஞருக்கு பெரிய பிரச்சனையாக வந்து முடிந்தது.

சாய் பல்லவியின் ரசிகர்கள் பலரும் படத்தில் காட்டப்பட்ட மொபைல் எண்ணிற்கு போன் செய்து சாய் பல்லவியிடம் பேச வேண்டும் என தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளனர். ஆரம்பத்தில் இதுபோன்று போன் வந்ததால் ஏதும் புரியாமல் தவித்த அந்த மாணவன் நாளுக்கு நாள் தனக்கு வரும் போன்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கோபமடைந்துள்ளார்.

தொடர் அழைப்பால் தொலைந்த நிம்மதி

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சென்னையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் வாகீசனுக்கு தொடர் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்ததாம். போனில் அழைத்தவர்கள் எல்லாம் தான் சாய் பல்லவியிடம் பேச வேண்டும் எனக் கூறினார்களாம். முதலில் காரணம் புரியாமல் தவித்த இந்த மாணவர் பின், அமரன் படத்தில் சாய் பல்லவி பயன்படுத்திய தொலைபேசி எண் இது என்பதை கண்டறிந்தாராம்.

ஒருகட்டத்தில் இவருக்கு 4000 பேர் சாய் பல்லவியிடம் பேச வேண்டும் என போன் செய்வதால் மன உளைச்சலக்கு ஆளாகிறேன் எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

ரூ.1.1 கோடி இழப்பீடு

அந்த நோட்டீசில், சொல்ல முடியாத கஷ்டங்கள் மற்றும் மன உளைச்சலை தனக்கு ஏற்படுத்தியதற்காக ரூ.1.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், இந்த எண் தனது ஆதார் முதல் வங்கி அறிக்கைகள் வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ளது, இதனால் மாற்றுவது கடினம். எனவ், தனது எண்ணை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

காட்சியை பிளர் செய்ய குழு

இது மீடியாக்களுக்கு தெரியவந்து மிகவும் வைரலான நிலையில், படத்தின் தயாரிப்புக் குழு மாணவர் வாகீசனிடம் மன்னிப்பு கோரியது. அத்துடன் தற்போது, மாணவரின் மொபைல் எண் இடம்பெற்ற காட்சிகளை பிளர் செய்து படக்குழு வெளியிட்டது.

இதையடுத்து, யூடியூப் வீடியோ, நெட்பிளிக்ஸ் வீடியோவிலும் இனி வாகீசனின் மொபைல் எண் பிளர் செய்து வெளியாகும் என தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர்கள் மாணவர் எழுப்பிய பிரச்சனைக்கு முடிவு கண்டுவிட்டதாக கூறி இருப்பினும், இந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அமரன் திரைப்படம்

திரையரங்குகளில் சுமார் 30 நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்ட அமரன் திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசன் அவரது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சோனி பிக்சருடன் சேர்ந்து தயாரித்துள்ளார்.

அமரன் படம் ஷிவ் ஆரூர் மற்றும் ராகுல் சிங் ஆகியோரின் புத்தகத் தொடரான India's Most Fearless: True Stories of Modern Military Heroes என்ற புத்தகத்தின் தழுவல். இந்தப் படம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது இறந்த மேஜர் முகுந்தின் வாழ்க்கைக் கதையை விவரிக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.