அமரன் படத்தைப் பார்த்து பயந்தது உண்மைதான்..ஆனா, துல்கர் அடிச்சு தூக்கினார்" - நடிகர் ராம்கி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அமரன் படத்தைப் பார்த்து பயந்தது உண்மைதான்..ஆனா, துல்கர் அடிச்சு தூக்கினார்" - நடிகர் ராம்கி

அமரன் படத்தைப் பார்த்து பயந்தது உண்மைதான்..ஆனா, துல்கர் அடிச்சு தூக்கினார்" - நடிகர் ராம்கி

Kalyani Pandiyan S HT Tamil
Dec 10, 2024 07:09 PM IST

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை பார்த்து பயந்ததாக நடிகர் ராம்கி பேசியிருக்கிறார்

அமரன் படத்தைப் பார்த்து பயந்தது உண்மைதான்..ஆனா, துல்கர் அடிச்சு தூக்கினார்"  - நடிகர் ராம்கி
அமரன் படத்தைப் பார்த்து பயந்தது உண்மைதான்..ஆனா, துல்கர் அடிச்சு தூக்கினார்" - நடிகர் ராம்கி

இது குறித்து பேசும் போது, "தற்போது எங்கு பார்த்தாலும் லக்கி பாஸ்கர் படம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி ரிலீஸ் படங்கள் மிகவும் பயங்கரமாக இருந்தது.

பாசிட்டிவான விமர்சனங்கள்.

சிவகார்த்திகேயனின் அமரன், பிரதர், பிளடி பக்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் அந்த ரேஸில் இருந்தன. ஆனால், லக்கி பாஸ்கர் படம் குறித்து கொஞ்சம் கொஞ்சமாக பாசிட்டிவான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. உண்மையில் சொல்லப்போனால் நாங்கள் இவ்வளவு பெரிய வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக படத்திற்கான திரையரங்குகள் அதிகமாக ஆரம்பித்தன.

தொடர்ந்து படத்தைப் பற்றி பாசிட்டிவாக பேச்சு அதிகமாக, அந்த எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. என்னுடைய நண்பர் ஒரு விநியோகஸ்தர்தான். அவர் எனக்கு போன் செய்து, நாளுக்கு நாள் திரையரங்குகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன என்று மகிழ்ச்சியாக பேசினார்.

 

படமும் மக்களுடன் மிகவும் கனெக்ட் ஆகிவிட்டது. காரணம், ஒரு சாதாரண மனிதன் மிகப்பெரிய பணக்காரனாக மாறுவது என்பது எல்லோருக்கும் இருக்கும் ஆவல்.மக்களுக்கு அது மிகவும் பிடித்து விட்டது. அதனால் படம் நாளுக்கு நாள் வரவேற்பில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

துல்கர் சல்மான் மேஜிக்

துல்கர் சல்மானுக்கு இருந்த ரசிகர் படை படத்தை கொண்டாடி தீர்த்து விட்டது. அந்த படம் நெட் ஃ பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வந்த பொழுது இன்னும் அதிகமான வரவேற்பை பெற்று இருக்கிறது.

குறிப்பாக என்னுடைய கேரக்டரை எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் பாஸ்கருக்கு ஆண்டனி கிடைத்த பின்னர்தான் அவன் கோடீஸ்வரனாக மாறுவான். என் வாழ்க்கையிலும் ஒரு அந்த ஆண்டனி யாரோ ஒருவர் கிடைக்க மாட்டாரா என்று எல்லோரும் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மக்களுக்கு பிடித்து விட்டது." என்று பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.