தமன்னாவிடம் அமலாக்கதுறை விசாரணை..மும்பையில் கங்குவா புரொமோஷன், சூர்யா செஃல்பி - டாப் சினிமா செய்திகள் இன்று
தமன்னாவிடம் அமலாக்கதுறை விசாரணை, மும்பையில் கங்குவா புரொமோஷன், ரசிகர்களுடன் சூர்யா செஃல்பி என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்

வேட்டையன் படத்தின் பாக்ஸ் |ஆபிஸ் வசூல் நிலவரத்துடன், சூர்யாவின் கங்குவா படம் புரொமோஷன் மும்பையில் தொடங்கியிருப்பது இன்றை முக்கிய சினிமா செய்தியாக உள்ளது. தமிழ் சினிமாவின் இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்
தள்ளிப்போன லப்பர் பந்து ஓடிடி ரிலீஸ்
கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து விமர்சகரீதியாக பாராட்டை பெற்ற லப்பர் பந்து படம் நல்ல வசூலையும் குவித்துள்ளது. இந்த படம் வரும் 18ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், படத்தை தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் இந்தியாவில் வெளியான பின்னர் தான் பிற நாடுகளில் வெளியிட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருப்பதால், படத்தை இந்தியா தவிர பிற நாடுகளில ஸ்டிரீம் செய்வதாக இருந்த சிம்ளி சவுத் ஓடிடி தளமும் வெளிநாட்டு ஓடிடி ரிலீசை தள்ளி வைத்துள்ளது.