செக்ஸ் அட்வைஸ் சொன்ன தமன்னா.. ஆடிப்போன ரசிகர்கள்.. புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கே..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  செக்ஸ் அட்வைஸ் சொன்ன தமன்னா.. ஆடிப்போன ரசிகர்கள்.. புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கே..

செக்ஸ் அட்வைஸ் சொன்ன தமன்னா.. ஆடிப்போன ரசிகர்கள்.. புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கே..

Malavica Natarajan HT Tamil
Oct 05, 2024 02:15 PM IST

இந்திய திரையுலகை கலக்கி வரும் தமன்னா கூறிய செக்ஸ் அட்வைஸைக் கேட்ட அவரது ரசிகர்கள் ஆட்டம் கண்டு உள்ளனர். மேலும், இவரது வார்த்தைக்கான அர்த்தம் புரியாமலும் புலம்பி வருகின்றனர்.

செக்ஸ் அட்வைஸ் சொன்ன தமன்னா.. ஆடிப்போன ரசிகர்கள்..
செக்ஸ் அட்வைஸ் சொன்ன தமன்னா.. ஆடிப்போன ரசிகர்கள்..

நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் அறிமுகம்

தமிழில் கேடி படத்தில் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த தமன்னா, கல்லூரி, ஆனந்த தாண்டவம், வியாபாரி, பையா, சிறுத்தை, கண்டேன் காதலை போன்ற படங்களில் நடித்து ஹீரோயின் மெட்டீரியலாகவே வலம் வந்தார். இதையடுத்து, அவர் நடித்த ஸ்கெட்ச், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, பெட்டர்மார்க்ஸ் போன்ற படங்கள் மக்களை பெரிதும் ஈர்க்காமல் போனது. இதையடுத்து தமிழில் அதிக படங்களில் நடிப்பதைத் தவிர்த்த அவர் தேவி, வீரம் போன்ற படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார்.

காவாலாவில் கவர்ந்த தமன்னா

பின் இந்தி மொழி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த அவர் காவாலா பாடலுக்கு நடனமாடி பலரையும் தன்வசம் ஈர்த்தார்.

முன்னணி நடிகை

தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் அதிகம் சம்பளம் பெறும் கதாநாயகிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இவர், சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவ்வாக இருக்கிறார். அத்துடன் மிகவும் ஓபன் டைப்பாகவும் இருக்கிறார்.

ரொமான்ஸ் நாயகியான தமன்னா

இதனால், இவரது காதல், ரிலேஷன்சிப் குறித்தும் பொது இடங்களில் மிகவும் கேஷுவலாக பதில் சொல்லி வருகிறார். இந்த நிலையில் தான், நெட்டிசன்கள் தமன்னாவை புகழ்ந்து வருகின்றனர்.

திரைப்படங்களைக் காட்டிலும் தற்போது வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டும் தமன்னா, ரொமான்ஸ் காட்சிகளுக்கு பஞ்சம் வைப்பதில்லையாம். அத்துடன், தனது முக பாவனைகளாலே பலரையும் ஈர்த்து விடுகிறாராம்.

அட்வைஸ் செய்த தமன்னா

அதுமட்டுமன்றி, இவர் தனது வெப் சீரிஸில் செக்ஸ் அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளாராம். அதில், தமன்னாவின் காதலன் உடலுறவுக்கு முன் என்ன செய்தால் பிடிக்கும் எனக் கேட்க, அவரோ, காஃபி மிகவும் அருவையான ஒன்று. அதன் மணம் காஃபியை விட அருமையான ஒன்று. காஃபி குடிக்கும் முன் முதலில் அதன் மணத்தை ரசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதைக் கண்ட நெட்டிசன்கள் தமன்னாவின் டயலாக்கை டீ கோடிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, அவருடன் இணைந்து ல்ஸ்ட் ஸ்டோரிஸ் எனும் தொடரிலும் நடித்துள்ளார். அந்த தொடரில் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருந்தது. இந்நிலையில், இவர்கள் இருவரும் காதலிப்பதாக அறிவித்து ஆண்டுகள் பல செல்வதால் எப்போது இவர்கள் திருமணம் செய்து கொள்வர் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

Whats_app_banner