'தம்பி நீ இன்னும் வளரலன்னு சொல்றாங்க.. எனக்கு இது முன்னயே நடந்திருக்கு' வேதனையாக பேசிய வாரிசு நடிகர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'தம்பி நீ இன்னும் வளரலன்னு சொல்றாங்க.. எனக்கு இது முன்னயே நடந்திருக்கு' வேதனையாக பேசிய வாரிசு நடிகர்

'தம்பி நீ இன்னும் வளரலன்னு சொல்றாங்க.. எனக்கு இது முன்னயே நடந்திருக்கு' வேதனையாக பேசிய வாரிசு நடிகர்

Malavica Natarajan HT Tamil
Nov 02, 2024 12:46 PM IST

எனது படங்களில் நான் பஞ்ச் வசனம் பேசினால் நீ இன்னும் வளரவில்லை என பலரும் கிண்டல் செய்வதாக நடிகர் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

'தம்பி நீ இன்னும் வளரலன்னு சொல்றாங்க.. எனக்கு இது முன்னயே நடந்திருக்கு' வேதனையாக பேசிய வாரிசு நடிகர்
'தம்பி நீ இன்னும் வளரலன்னு சொல்றாங்க.. எனக்கு இது முன்னயே நடந்திருக்கு' வேதனையாக பேசிய வாரிசு நடிகர்

லக்கி பாஸ்கர்

இந்திய மொழி திரைப்படங்கள் அனைத்திலும் கவனத்தை செலுத்தி வரும் துல்கர் சல்மான், மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

துல்கர் சல்மான் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளிப் பண்டிகை தினமான அக்டோபர் 31ம் தேதி வெளியானது.

படம் வெளியான 2 நாட்களிலேயே மக்கள் ரசிக்கும் விதமாக உள்ளது என பாஸிட்டிவ்வான ரிவ்யூவும் பெற்றது.

படத்தின் கதைத் தேர்வு

இந்நிலையில், துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துல்கர் சல்மான், தன் படங்கள் குறித்தும், கதை தேர்வு குறித்தும் சில கருத்துகளை முன் வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், தற்போது பல ஹீரோக்கள் பஞ்ச் வசனம் பேசி நடித்து மக்களைக் கவர்ந்து வருகின்றனர். புதுமுக நாயகர்கள் கூட தற்போதெல்லாம் பஞ்ச் வசனம் பேசுகின்றனர், ஆனால், துல்கர் சல்மான் படத்தில் பஞ்ச் வசனங்கள் இருப்பதில்லையே அது ஏன் என கேள்வி எழுப்பியிருப்பார்.

சிலருக்குத் தான் இதெல்லாம் செட் ஆகும்

இதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், பஞ்ச் வசனங்கள் சில குறிப்பிட்ட ஹீரோக்கள் பேசினால் தான் அது சரியாக வரும். அது அவர்களுக்கு மட்டும் தான் பொருத்தமாகவும் இருக்கும். ஆனால், நான் பேசினால், தம்பி நீ இன்னும் அந்த அளவுக்கு வளரலன்னு கிண்டல் செய்கின்றனர்.

நான் கிங் ஆப் கோதா படத்தில் நடித்த சமயத்தில் கூட சில பஞ்ச் வசனங்களை பேசி இருப்பேன். அதற்கு இதுபோன்ற விமர்சனங்களைத் தான் சந்தித்தேன் என கவலையுடன் கூறி இருப்பார்.

பெரும்பாலும் காதல் திரைப்படங்களிலும், வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படத்திலும் நடத்திருக்கும் துல்கர் சல்மான குறூப், கிங் ஆப் கோதா போன்ற படங்களில் தன்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்ற முயற்சி செய்திருப்பார், ஆனால், அது மக்கள் விரும்பும் படமாக இல்லாததாலும், அவரின் வசனங்களை பலரும் கிண்டல் செய்ததாலும் இவர் இப்படி கூறியுள்ளார்.

தோல்வி எனக்கானது

முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய துல்கர், ஒரு படத்தின் தோல்வி என்பது முற்றிலும் என்னுடைய பொறுப்பு தான். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கோதா படம் மக்களிடம் அதிகளவு விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த அளவு மக்களை ஈர்க்கவில்லை. இதனால், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியையே சந்தித்தது.

துல்கர் சல்மானின் நண்பர் அபிலாஷ் ஜோஷி கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். நண்பருக்கான அந்தப் படத்தில் நடித்த துல்கர் சல்மான் அவரே படத்தை தயாரிக்கவும் செய்தார்.

இந்தப் படத்தின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பியபோது தான் அவர், படத்தின் தோல்விக்கு தானே முழுப் பொறுப்பு என்றும், படத்தின் இயக்குநர் அபிலாஷ் அவரது அடுத்த படத்தில் வெற்றி இயக்குநராக மாறுவார் எனக் கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.