HBD Dulquer Salmaan: பான் இந்தியா சாக்லேட் பாய்.. பெண் ரசிகர்களின் கனவு கண்ணன் - துல்கர் சல்மான் பிறந்தநாள்
HBD Dulquer Salmaan: மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர் தான் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்முட்டிக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவர் ஆரம்பக் கல்வியை கேரளா மற்றும் சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் முடித்தார். அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. அமல் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
அதற்கு பிறகு 2012 ஆம் ஆண்டு சுஃபியாவை மணந்தார். மே 5 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு தந்தையானார். துல்கர் சல்மான் பர்டூ பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றார். படிப்பு முடித்த கையோடு அவர், துபாயில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
2012 ஆம் ஆண்டு வெளியான ' செகண்ட் ஷோ ' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் துல்கர். 2015 ஆம் ஆண்டில், 'சார்லி' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். நடிப்பு மட்டுமின்றி பின்னணி பாடகரும் தொழிலதிபரும் ஆவார்.
இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான வாகை மூடி பேசவும் படம் மூலம் அறிமுகமானார். முதல் படம் இவருக்கு கை கொடுவில்லை என்றாலும் இரண்டாவது படமான ஓ காதல் கண்மணி இளம் பெண்களின் மத்தில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம் என வெற்றிப் படங்களை கொடுத்து சாக்லட் பாயாக மாறினார்.
மனைவியால் வந்த வாழ்க்கை
அவருக்கு நடிப்பிற்கு வர வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருந்து உள்ளது. ஆனால் அவர் மனைவி தான் திரைத்துறையில் அறிமுகமாக சொல்லி உள்ளார். அதற்கு பிறகு தான் நடிக்க வந்து உள்ளார் துல்கர் சல்மான்.
துல்கர் சல்மான் மட்டும் தான் மலையாளத்தில் அதிகம் விரும்பப்படும் மனிதர்கள் பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.
2014 ஆம் ஆண்டில் சென்னையின் மிகவும் விரும்பத்தக்க மனிதர்கள் பட்டியலில் 7 வது இடத்தைப் பிடித்தார். உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆன்லைன் கருத்துக்கணிப்பில் இவர், 2014 ஆம் ஆண்டில் 45 வது இடத்தைப் பிடித்தார் . அவரது அதிரடியான தோற்றத்தாலும் மயக்கும் புன்னகையாலும், பலரின் இதயங்களைக் கவரந்தார்.
துல்கர் சல்மான் திரையுலகில் அறிமுகமாகும் முன் ஒரு தொழிலதிபராக இருந்தார். பெங்களூருவை தளமாகக் கொண்ட மகப்பேறு மருத்துவமனையின் இயக்குனரான இவர், கார் வர்த்தகத்திற்கான இணையதள போர்ட்டலை வைத்திருந்தார். அவருக்கு வெற்றிகரமான வணிக வாழ்க்கை இருந்தது.
கார் மீது அதிக ஆர்வம்
துல்கர் சல்மான் கார் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அவரது பார்க்கிங் பகுதியில் பல்வேறு கார் பிராண்டுகள் உள்ளன. தற்போது, துல்கரிடம் ஆடி க்யூ7, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், லேண்ட் குரூசர், ரேஞ்ச் ரோவர் கார்கள் உள்ளன. அவரது வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.7 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்