Lucky Baskhar Box Office Day 1 : துல்கர் சல்மானுக்கு கைக்கொடுக்குமா லக்கி பாஸ்கர்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Lucky Baskhar Box Office Day 1 : மலையாள நட்சத்திரம் துல்கர் சல்மான் டோலிவுட்டில் ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார். நேற்று வெளியான வெளியான லக்கி பாஸ்கரும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

வாத்தி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது.
மலையாள நட்சத்திர ஹீரோ துல்கர் சல்மான் தெலுங்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ஷ்ட சின்னமாக மாறியுள்ளார். ஏனெனில் அவர் நடித்த ஒவ்வொரு தெலுங்கு படமும் ஹிட். லக்கி பாஸ்கர் மூலம் மீண்டும் தெலுங்கு ரசிகர்களுக்கு வந்து தனது நடிப்பால் கவர்ந்திருக்கிறார். துல்கர் இதற்கு முன்பு தெலுங்கில் மகாநடி, சீதாராமம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அப்பாவுக்கு ஏற்ற மகன்
துல்கர் சல்மான் மலையாள ஹீரோ மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனாக சினிமாவில் அடியெடுத்து வைத்தாலும், தனது அழகான தோற்றத்தாலும், அப்பாவுக்கு ஏற்ற மகனாக நடித்தும் தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் மெல்ல மெல்ல கால் பதித்திருக்கிறார். இப்போது தெலுங்கு இளைஞர்கள் மத்தியில் டோலிவுட் ஹீரோவுக்கு இருக்கும் அதே க்ரேஸ் துல்கரும்தான்.