டிரைவருக்கு ஆபிஸ் வர என்ன தகுதி இருக்கு.. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ.. கட்சி தொடங்கிய உடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  டிரைவருக்கு ஆபிஸ் வர என்ன தகுதி இருக்கு.. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ.. கட்சி தொடங்கிய உடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக

டிரைவருக்கு ஆபிஸ் வர என்ன தகுதி இருக்கு.. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ.. கட்சி தொடங்கிய உடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக

Malavica Natarajan HT Tamil
Nov 06, 2024 01:33 PM IST

தவெக மாநாட்டிற்கு வந்தவர்களை அழைத்துச் சென்ற தங்களுக்கு தற்போதுவரை பணம் தராமல் அலைக்கழித்து, அவரை மிகவும் மோசமாக நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக வேன் ஓட்டுநர்கள் புகாரளித்துள்ளார்.

டிரைவருக்கு ஆபிஸ் வர என்ன தகுதி இருக்கு.. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ.. கட்சி தொடங்கிய உடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக
டிரைவருக்கு ஆபிஸ் வர என்ன தகுதி இருக்கு.. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ.. கட்சி தொடங்கிய உடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக

தவெக முதல் மாநாடு

இதையடுத்து தான், தனது கட்சியின் கொள்கைகளையும், நோக்கத்தையும் மக்களிடம் அறிவிக்க நினைத்த விஜய் கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்துவதற்கான அனுமதியை மிகுந்த சிரமத்திற்குப் பின் பெற்றார். நடிகர் விஜய்யை நேரில் பாரக்கவும், அவரது அரசியல் அணுகுமுறையை அறியவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த வாகனங்களிலும், பொதுப் போக்குவரத்திலும் வாடகை வண்டிகளிலும் மாநாட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

பின், நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சிக் கொடி ஏற்றி வைத்துவிட்டு, தனது கட்சியின் கொள்கைகளைப் பேசிய விஜய், தொடர்ந்து திராவிட, தமிழ் தேசிய கட்சிகள் குறித்தும், கூட்டணி குறித்தும் பேசி மக்களின் வரவேற்றை பெற்றிருப்பார். மேலும், பல அரசிய் கட்சிகளில் அதிரடி மாற்றத்தையும் உருவாக்கி இருப்பார்.

தவெகவினர் மீது பறந்த புகார்

இந்நிலையில், மாநாட்டில் பங்கேகற்ற தவெகவினர் குறித்து பரபரப்பு புகார் ஒன்று போலிஸ் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் அளித்த அந்தப் புகாரில், மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து வந்த வேன் ஓட்டுனர்களுக்கு தற்போது வரை வாடகை தரவில்லை. அதனை கேட்டால், விஜய் கட்சியினர் தங்களை அலைக்கழிப்பதுடன், மிக மோசமாகத் திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

வண்டி வாடகை தராமல் மிரட்டல்

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வாகன ஓட்டுநர் ஒருவர், அபிராமபுரம் பகுதி துணைச் செயலாளர் மோகன் என்பவர் எங்களை அணுகி தவெக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு, நாங்களும் அவரிடம் வண்டி வாடகை, சம்பளம் ஆகியவற்றை முறையாகப் பேசிவிட்டு மாநாட்டிற்கு கிளம்பினோம்.

தொண்டர்களை அழைத்துக் கொண்டு மாநாட்டிற்கு செல்லும் போதே வாகனத்திற்குள் அவர்கள் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டனர். பிறகு அவர்களை குடி போதையிலே தான் நாங்கள் மாநாட்டில் இறக்கி விட்டோம். அவர்கள் குடி போதையில் இருந்ததால், தங்களுக்கு சொன்னபடி சாப்பாடு வாங்கித் தரவில்லை என ஆரம்பத்தில் நினைத்தோம்.

இதையடுத்து, மாநாடு முடிந்த பின் அனைவரையும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தோம். அப்போதும் மோகன் தங்களிடம் பேசியபடி நடக்கவில்லை. மாநாடு முடிந்த பிறகும் அவர் தொடர்ந்து சம்பளம் தராமலே இருந்தார். இதுகுறித்து கேட்டால், டைரவர் நாயிக்கு ஆபிஸில் என்ன வேலை. உன் பணத்தை எல்லாம் தரமுடியாது எனக் கூறி மிரட்டினர்.

போலீசில் புகாரளித்தும் பயனில்லை

இதனால், பயந்துபோய், நான் அபிராமிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தேன். இதை விசாரித்த போலீசார், கட்சியினருடன் பேசி விட்டோம். பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறினர். அதை நம்பி அங்குச் சென்றால், என்னை மிகவும் மரியாதைக் குறைவாக நடத்தினர். அங்குள்ள சிலர் அடிக்கப் பாய்ந்தனர். மேலும், டிரைவர்களை தரக்குறைவாக பேசி முடிந்தால் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

பிச்சைக்காரன் போல் மாறிவிட்டேன்

அவர்கள் பணம் தராததால், நான் மிகவும் கஷ்டத்தில் உள்ளேன். மாநாட்டிற்குப் பிறகு நான் எந்த வேலைக்கும் போகவில்லை. என்னிடம் சுத்தமாக பணமே இல்லாமல் சா்ப்பிடக் கூட பிறரின் உதவியை நாடியுள்ளேன். காசு இல்லாமல் தற்போது பிச்சைக்காரன் போல் மாறிவிட்டேன் என்றார்.

மேலும், அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் எங்களுக்கு மிரட்டல் தொடர்வதால் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.