தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yash Chopra: இந்திய திரை இயக்குனர் யாஷ் சோப்ரா வரலாறு – ஆவண- சீரிஸ் எப்போது?

Yash Chopra: இந்திய திரை இயக்குனர் யாஷ் சோப்ரா வரலாறு – ஆவண- சீரிஸ் எப்போது?

Priyadarshini R HT Tamil
Jan 31, 2023 01:36 PM IST

Netflix Announces: இந்திய திரைப்பட இயக்குனர் யாஷ் சோப்ராவின் வாழ்க்கையை மையமானக்கொண்ட ஆவண-சீரிசை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

இயக்குனர் யாஷ் சோப்ரா - கோப்புப்படம்.
இயக்குனர் யாஷ் சோப்ரா - கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

‘தி ரொமான்டிக்ஸ்‘ என்பதன் டிரைலர் புதன்கிழமை (நாளை) நெட்பிளிக்சில் வெளியிடப்படும். யாஷ் சோப்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதல் காட்சி பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும். யாஷ் சோப்ரா, இந்தி திரை உலகின் குறிப்பிடும்படியான திரைப்படங்களான சில்சிலா, லம்ஹே, கபிகபி, வீர்ஷாரா, தில் டூ பகல் ஹை, சந்தி மற்றும் ஜப்தக்ஹைஜான் ஆகியவற்றை இயக்கியவர். 

‘தி ரொமான்டிக்ஸ்‘ ஆவண-சீரிசை ஸ்மிரிதி முந்த்ரா இயக்குகிறார். ‘இந்தியன் மேட்ச் மேக்கிங்‘ என்ற வெற்றிகரமான ஆவணப்பட இயக்குனர். 

“யாஷ் சோப்ராவை காதல் ரொமாண்டிக் படங்களின் மன்னன் என்றே கூறலாம். அவரது படங்கள், உணர்வுகள், தனித்தன்மை மற்றும் இந்தி சினிமாவில் கலாச்சார மாற்றம் என்று புதிய அலையை உருவாக்கியதுடன், இந்தி சினிமாத்துறையை இன்று இருக்கும் இடமான உலகின் தலைசிறந்த பெரிய திரைப்பட இன்டஸ்டிரிகளுள் ஒன்றாக மாற்ற உதவியது. அவரது பாடல்கள், கதைகள், நினைவுகள் ஆகிய அகைனத்தையும் கொண்டாடும் வகையில் நாங்கள் யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் ஸ்மிரிதி முந்த்ராவுடன் என்ற பெரும் படைப்பாற்றலின் ஜாம்பவான்களுடன் நாங்கள் கைகோர்கிறோம்“ என்று நெட்பிளிக்ஸ் இந்தியாவின் கன்டென்ட் துணைத்தலைவர் மோனிகா ஷெர்கில் கூறினார். 

“இந்த ஆவணப்படம் யாஷ் சோப்ரா மற்றும் அவரது மகன் ஆதித்யா சோப்ரா ஆகியோரின் கதையாகும். அவர் இருவரும் உருவாக்கிய உலகத்தரமான ஸ்டுயோக்கள் மற்றும் அவர்களின் தயாரிப்பு குறித்து பேசும். பாலிவுட் திரை வரலாற்றின் ஒரு செல்வாக்கான குடும்பத்தின் வாழ்க்கைளை எங்கள் வாடிக்கையாளர் வாழ்ந்து பார்க்கும் அனுபவமாக ஆவணபடம் இருக்கும் என்பது மகிழ்ச்சியாக உள்ளது“ என்று அவர் மேலும் கூறினார்.           

யாஷ் ராஜ் பிலிம்ஸ், தற்போது பதான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொண்டாடி வருகிறது. ஷாருக்கான் மற்றுத் தீபிகா படுகோனே நடித்த அந்த திரைப்படம் ரிலீசான 5 நாளிலே ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்துவிட்டது.  

IPL_Entry_Point

டாபிக்ஸ்