எக்ஸை விட்டு ஓடிய விக்னேஷ் சிவன்.. ரவுண்டு கட்டிய நெட்டிசன்ஸ்.. இதெல்லாம் தேவையா கோபி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எக்ஸை விட்டு ஓடிய விக்னேஷ் சிவன்.. ரவுண்டு கட்டிய நெட்டிசன்ஸ்.. இதெல்லாம் தேவையா கோபி?

எக்ஸை விட்டு ஓடிய விக்னேஷ் சிவன்.. ரவுண்டு கட்டிய நெட்டிசன்ஸ்.. இதெல்லாம் தேவையா கோபி?

Malavica Natarajan HT Tamil
Dec 01, 2024 12:52 PM IST

பல்வேறு கிண்டல்களையும், விமர்சனங்களையும் தொடர்ச்சியாக பெற்று வந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் தள பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துள்ளார்.

எக்ஸை விட்டு ஓடிய விக்னேஷ் சிவன்.. ரவுண்டு கட்டிய நெட்டிசன்ஸ்.. இதெல்லாம் தேவையா கோபி?
எக்ஸை விட்டு ஓடிய விக்னேஷ் சிவன்.. ரவுண்டு கட்டிய நெட்டிசன்ஸ்.. இதெல்லாம் தேவையா கோபி?

இதையடுத்து, இந்தத் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதில் தொடங்கிய சர்ச்சை இப்போது, திருமண வீடியோவை வெளியிட்டது வரா தொடர்கிறது.

தனுஷுடன் பிரச்சனை

முன்னதாக, இவர்களது திருமணம், நயன்தாராவின் சினிமா பயணம் என தனது வாழ்க்கை வரலாற்றை நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் ஆவணப்படமாக வெளியிட தம்பதியினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திடம் ரூ.25 கோடிக்கு வீடியோ உரிமையையும் அளித்திருந்தனர்.

அந்த வீடியோவில் நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தியதால், தனுஷ் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி மீது வக்கீல் நோட்டீஸ் அளித்தார். அத்துடன் ரூ.10 கோடி நஷ்ட ஈடும் கேட்டிருந்தார்.

கோர்ட்டுக்கு சென்ற விவகாரம்

இதனால், கோபமடைந்த நயன்தாரா 3 பக்கத்திற்கு தனுஷை திட்டி ஒரு அறிக்கையும், விக்னேஷ் சிவன், மேடைகளில் பேசும்படி நடந்து கொள்ளுமாறு கூறி வக்கீல் நோட்டீஸுடன் இணைத்து வீடியோவும் வெளியிட்டார்.

இது இந்திய சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விக்னேஷ் சிவன் அவரது போஸ்டை நீக்கிவிட்டார். இதனால், அவரை நெட்டிசன்கள் கிம்டல் செய்து வந்தனர். இந்தப் பிரச்சனை தற்போது நீதிமன்றம் வரை சென்றதால், நெட்டிசன்கள் அமைதியாக இருந்த சமயத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் விக்னேஷ் சிவன்.

அஜித் படத்தை கைவிட்டது ஏன்?

விக்னேஷ் சிவன், சில நாட்களுக்கு முன் பான் இந்தியா நட்சத்திரங்கள் பங்கேற்ற சிறப்பு நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில், நடிகர் அஜித்தை வைத்து இயக்க இருந்த படம் காமெடி கலந்து எழுதி இருந்தேன். அந்த படத்திற்கு தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளாததால், படம் கைவிடப்பட்டிருந்தது. ஒருவேளை இந்தப் படம் வெளிவந்திருந்தால் பகத் பாசில் நடித்த ஆவேசம் படம் போல இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், நானும் ரௌடி தான் படத்தை அஜித் பலமுறை பார்த்ததாக, என்னை அறிந்தால் பட சமயத்தில் தெரிவித்திருந்ததாக கூறினார் என விக்னேஷ் பேசி இருந்தார். ஆனால், நானும் ரௌடி தான் படத்திற்கு முன்பே என்னை அறிந்தால் ரிலீஸ் ஆகி விட்டது என பலரும் கிண்டல் செய்தனர்.

தயாரிப்பாளருடன் சண்டை

அத்துடன், காத்து வாக்குல ரெண்டு காதல் படம் எனக்கு தெரியாமல் நேரடியாக ஓடிடிக்கு செல்ல இருந்தது. பின், தயாரிப்பாளரிடம் சண்டை போட்டு தியேட்டரில் ரிலீஸ் செய்தோம் என்றார்.

ஆனால், தற்போது, காத்து வாக்குல ரெண்டு காதல் பட தயாரிப்பாளருடன் இணைந்து தான் அடுத்த படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இதனால், விக்னேஷ் சிவன் பேச்சு ஒன்றுக்கு ஒன்று நேர்மாறாக இருப்பதாக நெட்டிசன்கள் அவரை டேக் செய்து விமர்சித்து வந்தனர்.

எக்ஸ் தளம் டீ ஆக்டிவேட்

சமீப காலமாக தொடர்ந்து விக்னேஷ் சிவன் விமர்சிக்கப்பட்டு வந்ததால், பொறுமை இழந்து இவர் எக்ஸ் தளத்தின் கணக்கை டீ ஆக்டிவேட் செய்துள்ளார் என பலரும் தெரிவிக்கின்றனர்.

தற்போது இவர் எக்ஸ் தளத்தை விட்டு போனதற்கும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கிடையில், விக்னேஷ் சிவன் ஏன் எக்ஸ் தளத்தை விட்டுச் சென்றார் என விரைவில் விளக்கம் அளிப்பார் எனவும் ஒரு தரப்பு கூறி வருகிறது.

முன்னதாக, விக்னேஷ் பங்கேற்ற பான் இந்தியா நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் எப்படி விக்னேஷ் சிவன் பங்கேற்க முடியும். இவர் இதுவரை எந்தப் படங்களையும் பான் இந்தியா அளவில் எடுக்க வில்லை எனவும் குறிப்பிட்டு அவரை கிண்டல் செய்து வந்தனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.