ஓடிடி தளத்தில் வெளியாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஓடிடி தளத்தில் வெளியாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்

ஓடிடி தளத்தில் வெளியாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்

Aarthi V HT Tamil
May 19, 2022 10:32 AM IST

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது.

<p>காத்துவாக்குல ரெண்டு காதல்</p>
<p>காத்துவாக்குல ரெண்டு காதல்</p>

‘நானும் ரவுடி தான்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி இரண்டாவதாக இந்த படம் மூலம் கூட்டணி அமைத்து இருக்கின்றனர். ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை  தயாரித்து இருக்கின்றனர். படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி இருந்தது.

முக்கோண காதலை மையமாக கொண்ட இப்படம் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி உள்ளது. அனிருத் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். 

 ‘காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

இந்த நிலையில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் வெளியாகி 22 நாட்களில் 142 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படக்குழுவினர் சமீபத்தில் அறிக்கை வெளியீட்டனர். 

இப்படி இருக்கையில் படம் வெளியாகி 22 நாட்களில் ஓடிடி தளத்தில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் வெளியிடப்பட உள்ளது. 

நாளை ( மே 20 ) டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது. இதனை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

சரியான பொழுதுபோக்கான படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாத ரசிகர்கள், ஓடிடியில் காண ஆர்வமாக இருக்கின்றனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.