Vetrimaaran: கிரீன் சிக்னல் கொடுத்த வெற்றிமாறன்... கேட்டது கிடைத்த சந்தோஷத்தில் நடிகர்-director vetrimaaran replies to junior ntr wish - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vetrimaaran: கிரீன் சிக்னல் கொடுத்த வெற்றிமாறன்... கேட்டது கிடைத்த சந்தோஷத்தில் நடிகர்

Vetrimaaran: கிரீன் சிக்னல் கொடுத்த வெற்றிமாறன்... கேட்டது கிடைத்த சந்தோஷத்தில் நடிகர்

Malavica Natarajan HT Tamil
Sep 21, 2024 04:39 PM IST

Vetrimaaran: இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் விரும்பம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பச்சை கொடியை அசைத்துள்ளார் வெற்றிமாறன்.

Vetrimaaran: கிரீன் சிக்னல் கொடுத்த வெற்றிமாறன்... கேட்டது கிடைத்த சந்தோஷத்தில் நடிகர்
Vetrimaaran: கிரீன் சிக்னல் கொடுத்த வெற்றிமாறன்... கேட்டது கிடைத்த சந்தோஷத்தில் நடிகர்

ஜூனியர் என்டிஆரின் விருப்பம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடகர் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் தேவாரா-1. இத்திரைப்படம் இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், அதற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய ஜூனியர் என்டிஆர் தமிழில் தன்னுடைய விருப்பமான இயக்குநர் என்றால் அது வெற்றிமாறன் தான். அவருடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்தப் படத்தை தமிழில் எடுத்து தெலுங்கில் டப் செய்யலாம் எனக் கூறியிருந்தார்.

வெற்றி மாறனின் பதில்

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இயக்குநர் வெற்றி மாறனிடம் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய இயக்குநர் வெற்றி மாறன், நான் ஜூனியர் என்டிஆரை முன்னதாகவே சந்தித்து பேசினேன். நாங்கள் இருவரும் ஒரு கதைக்கான ஐடியா குறித்து விவாதித்தோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு கமிட்மெண்டுகளில் உள்ளோம். அதை முடித்தப் பின் இந்த திரைப்படத்திற்கான பணிகளை தொடங்குவோம் எனக் கூறினார்.

இயக்குநர் வெற்றிமாறனின் இந்த பதில் மூலம் வெற்றிமாறன்- ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் புதிய படம் ஒப்பந்தம் ஆகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜூனியர் என்டிஆரின் கனவும் நிறைவேறியுள்ளது தெரிகிறது.

வெற்றிமாறன் விடுதலை படத்தின் 2ம் பாகத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போய் கொண்டிருப்பதால் அந்தப் படத்தின் மற்ற காட்சிகளை படமாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அத்துடன், நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பை இயக்கவுள்ளார். இந்தப் பணிகளை முடித்த பிறகே இவர் ஜூனியர் என்டிஆருடன் கை கோர்ப்பார் எனத் தெரிகிறது. இந்தப் படம் கண்டிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு சிறந்த விஷுவல் ட்ரீட்டாகவே இருக்கும்.

தேவாரா-1 ரிலீஸ்

முன்னதாக, இந்த திரைப்படம் குறித்த நேர்காணல் ஒன்றில் ஜூனியர் என்டிஆர் அனிருத் இந்தியாவின் அடுத்த ஏஆர் ரஹ்மானாக உருமாறி வருகிறார் என புகழ்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை கொரட்டலா சிவா இயக்க ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் என பல திரைப் பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழு அதற்கான ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.