Vetrimaran: இவரைப் போல் ஆகிடுமோ? உச்சகட்ட அப்செட்டில் டைரக்டர் வெற்றிமாறன்!-director vetrimaran upset on viduthali 2 release - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vetrimaran: இவரைப் போல் ஆகிடுமோ? உச்சகட்ட அப்செட்டில் டைரக்டர் வெற்றிமாறன்!

Vetrimaran: இவரைப் போல் ஆகிடுமோ? உச்சகட்ட அப்செட்டில் டைரக்டர் வெற்றிமாறன்!

Malavica Natarajan HT Tamil
Sep 20, 2024 06:02 PM IST

Vetrimaran: விடுதலை திரைப்படத்தின் 2ம் பாகம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதால் இயக்குநர் வெற்றிமாறன் படத்தின் வெளியீடு குறித்து அப்செட்டில் உள்ளதாகத் தெரிகிறது.

Vetrimaran: இவரைப் போல் ஆகிடுமோ? உச்சகட்ட அப்செட்டில் டைரக்டர் வெற்றிமாறன்!
Vetrimaran: இவரைப் போல் ஆகிடுமோ? உச்சகட்ட அப்செட்டில் டைரக்டர் வெற்றிமாறன்!

இயக்குநர் வெற்றிமாறன் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம்வந்த சூரியை கதாநாயகனாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கிவருவதாக அறிவித்தார். மேலும், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வந்த உடனே இப்படம் மீதான ஆவல் ரசிகர்களுக்கு அதிகரிக்கத் தொடங்கியது. காரணம் வெற்றிமாறன் இதற்கு முன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம். கூடுதலாக சூரியை கதாநாயகனாக அறிவித்ததால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

யோசனையில் விடுதலை 2 படக்குழு

விடுதலை முதல் பாகத்தின் படபிடிப்பின் போதே 2ம் பாகத்திற்கான பாதி படப்பிடிப்பு பணிகள் எடுக்கப்பட்டது. இந்த காட்சிகளுக்கு ஏற்றார் போல முதல் பாகம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், படக்குழு எதிர்பார்த்த அளவில் விடுதலை 1 படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இந்நிலையில், விடுதலை முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்திற்காக எடுக்கப்பட்ட பல காட்சிகளில் தற்போது இயக்குநர் வெற்றிமாறனுக்கு உடன்பாடு இல்லையாம். ஆனால் எடுக்கப்பட்ட காட்சிகள் பாதி படம் அளவுக்கு வந்து விட்டதால் என்ன செய்வது என யோசித்து வருகிறார்.

இந்த காட்சிகளை மீண்டும் படமாக்கினால் பல கோடி ரூபாய் செலவாகும் என்பதால், எடிட்டிங்கில் சரி செய்ய முடியுமா என படக்குழு யோசித்து வருகிறது. அத்துடன் விடுதலை 2ம் பாகத்தில் பல காட்சிகளை சிஜி-யில் அமைக்க வேண்டும் என்பதால் இது படக்குழுவிற்கு கூடுதல் தலைவலியாக உள்ளது.

பிஸியாகும் விஜய் சேதுபதி

இது ஒருபுறம் இருக்க தற்போது, விடுதலை 2ம் பாகத்தின் முக்கிய நாயகனான விஜய் சேதுபதி, இயக்குநர் மிஸ்கின் இயக்கும் ட்ரெயின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படபிடிப்பு முடிந்த உடன் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹோஸ்ட்-ஆக செல்கிறார்.

இதனால், செய்வதறியாது இக்கட்டான சூழலில் படக்குழு இருக்கிறது. மேலும், வெற்றிமாறன்- சூர்யா கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.

பிரம்மாண்ட இயக்குநருக்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எனப்படும் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்த நிலையில், 3ம் பாகத்தை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் உள்ளாராம் சங்கர். 3ம் பாகத்திற்கான லீடுகளும் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், என்ன செய்வது எனத் தெரியாமல் புலம்பி வருகிறாராம் இதனால் விடுதலை 2ம் பாகத்தின் நிலை இந்தியன் படம் போல் ஆகிவிடுமோ என வெற்றிமாறன் அச்சத்தில் உள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட 2 இயக்குநர்கள் தற்போது தங்களது அடுத்த படத்தின் பணிகளை எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என அறியாமல் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.