தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Siva: ‘சூர்யா சார் செம ஹேப்பி’.. யார் இந்த கங்குவன்? - இயக்குநர் சிவா பேட்டி!

Director Siva: ‘சூர்யா சார் செம ஹேப்பி’.. யார் இந்த கங்குவன்? - இயக்குநர் சிவா பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 23, 2023 10:45 AM IST

கங்குவா திரைப்படம் குறித்து இயக்குநர் சிவா முன்னதாக கொடுத்த பேட்டி இங்கே!

இயக்குநர் சிவா நேர்காணல்!
இயக்குநர் சிவா நேர்காணல்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “சூர்யா சாருடன் பணிபுரிந்தது அருமையான அனுபவம். அவர் ஒரு சிறந்த நடிகர்; ஒரு சிறந்த மனிதர்; அவருடன் வேலை பார்த்தது வசதியாக இருக்கிறது.அவர் எங்களின் வேலையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மொத்தக்குழுவும் இந்த வாய்ப்பை எப்படியான ஒரு வாய்ப்பு என்பதை உணர்ந்து இருக்கிறது. தயாரிப்பாளர்களும் இந்த கதையை நம்பி என்னுடைய விஷனை பெரிய திரையில் கொண்டு வர விரும்பி இருக்கிறார்கள்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும்.

இது 3 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவான் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், “கங்குவான் திரைப்படத்தை நாங்கள் 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். படத்தில் சூர்யா சார் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் கவர்ச்சியாகவும், சக்திவாய்ந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேண்டஸி கலந்த திரைப்படமாக இருக்கும்.

இதில் பீரியாடிக் சம்பந்தப்பட்ட காலமும், சமகாலம் என இரண்டும் கலந்து இருக்கும். நாங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்க விரும்புகிறோம். ஒரு கம்பீரமான மற்றும் மறக்கமுடியாத திரைப்படம் கொடுக்கும் அனுபவம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும்.” என்று பேசினார்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்