ரொம்ப டஃப்.. புது ஹீரோக்களை வைச்சு படம் ரிலீஸ் செய்யிறது எல்லாம்.. ஆதங்கப்பட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
ரொம்ப டஃப்.. புது ஹீரோக்களை வைச்சு படம் ரிலீஸ் செய்யிறது எல்லாம்.. ஆதங்கப்பட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியினைப் பார்க்கலாம்.
இப்போது எல்லாம் புதிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கி ரிலீஸ் செய்வது ரொம்ப டஃப் ஆக இருக்கிறது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் சீரிஸை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து இருக்கிறார். அது, வரக்கூடிய அக்டோபர் 18ஆம் தேதி அமேஸான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகிறது.
இதுதொடர்பாக ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ் வெப் சீரிஸ் குழுவினருடன் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டியளித்துள்ளார்.
அதில், ‘’இது ஒரு சயின்ஸ் ஃபிக்சன் எல்லாம் கிடையாது. ஸ்ட்ரெஞ்சர் பற்றி எல்லாம் இல்லை. இவர்கள் எல்லாம் லைட் போட்டு சைக்கிளில் மட்டும் தான் ஸ்ட்ரெஞ்சர் திங் என்று நினைக்கிறேன். ஐடியாவே ரொம்ப புதுசாக இருந்தது. யாரை இயக்குநர் ஆக்கலாம் என்று முயற்சிக்கும்போது, அசோக் வந்து என்னோடு அசோசியேட்டாக வொர்க் செய்தவர். பீட்சா, ஜிகர்தண்டாவில் என்னிடம் வொர்க் செய்திருக்கிறார். பஃபூன் என்று ஒரு படம் தனியாகப் பண்ணி இருக்கிறார்.
எனக்கு கிட்ஸ் உடைய அப்பாவித்தனத்தை சினிமாவில் காட்ட ஆர்வம் - கார்த்திக் சுப்புராஜ்
இதில் நடிச்சவங்க தான் புது பசங்க. நவரசம் ஷார்ட் ஃபிலிமில் நடிச்ச பையன் தான், இதிலும் பண்ணியிருக்கான். அப்போதே கேரவன் கேட்டான். சூட்டிங் நடந்திட்டு இருக்கும்போது திடீர்னு காணோம். எங்கன்னு தேடினால், கேரவனில் இருக்கான்.
எனக்கு கிட்ஸ் படத்தில் வழக்கமாக அவங்களோட அப்பாவித்தனத்தை காட்டுற மாதிரியோ, குழந்தைத் தனத்தை காட்டுறமாதிரியோ சினிமாவில் நடக்கும் இல்லையா. எனக்கும் அப்படி தான், ஒரு சின்ன நகரில் இருக்கும் ஒரு ஐந்து பசங்க ஒன்றாக சேரும்போது என்ன நடக்கப்போகிறது என ஒரு கதை வரும்போது ஆர்வமாக இருந்தேன். கதையும் எதை நோக்கிப்போகும்ன்னு இருந்துச்சு. அப்போது தான் சொன்னேன், பசங்களோட நடிப்பு மிக மிக முக்கியம். எனக்கு புதிதாக பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், மூன்று இயக்குநர்கள் இருக்காங்க.
ஒரே லோகேஷன். சீனாகப் பிரிச்சிருந்தாங்க. இவர் ஒரு ஷிஃப்ட் டைரக்ட் பண்ணுவார். அது முடிஞ்சதும் இன்னொருத்தர் டைரக்ட் பண்ணுனார். இப்படி மூன்று இயக்குநர்கள் டைரக்ட் செய்திருக்காங்க’’ என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசினார்.
மேலும் பேசிய தொடர்ந்த அவரிடம்,
’’கேள்வி: அப்போது உங்களோட அடுத்த படம் குறித்து யோசித்து வைத்துள்ளீர்களா?
பதில்: எல்லா கதைகளுமே நமது கனவுக்கதையாகத் தான் இருக்கும். சும்மா இந்தப் படத்தைச் செய்வோம் அப்படிங்கிற மனநிலையில் எந்தப் படமும் பண்றதுகிடையாது. ஒரு தயாரிப்பு நிறுவனமாக படம்பண்ணும்போது, நல்ல கன்டென்ட் இருக்கிறதா, புதிய கதையாக, புதிய இயக்குநர்களை வைச்சுப் படம் பண்ணனும்னு பெரிய கனவு இருக்கிறது. அதற்கான முயற்சிகள் மற்றும் வேலைகள் செய்துட்டு இருக்கோம்.
கேள்வி: இது சினிமாவுக்கு செட்டாகும், இது வெப் சீரிஸாக எடுத்தால் நல்லாயிருக்கும் என்று பிரிப்பது எப்படி?
பதில்: சீரிஸ் அப்படிங்கிற கான்செஃப்ட்டே ஓடிடிக்குத்தான் செட் ஆகும். நாங்க ஹாட் ஸ்டார், சோனி லிவ், ஜீ 5 ஆகிய நிறுவனங்களுக்கு எல்லாம் ஒரு வெப் சீரிஸ் செய்திருக்கோம். அமேஸானுக்கு இதுதான் முதல்முறை. நிறைய கதைகளைப் பேசக்கூடிய இடம் வந்து இந்த ஓடிடி தான். திரையரங்கு ரிலீஸ் என்று போகும்போது, அதற்கான மார்க்கெட், யார் நடிக்கிறார் இதைப் பொறுத்து இருக்குது. ஒரு புது நடிகரை வைச்சு படம் எடுப்பது, ரொம்ப ரொம்ப டஃப் ஆக இருக்கு. அதை வெளியில் கொண்டு வந்து ரிலீஸ் செய்ய வைக்கிறது அப்படிங்கிறது, கொஞ்சம் இல்ல, ரொம்பவே சேலஞ்சிங் ஆன விஷயம் அது.
நாங்கள் படம்பண்ணும்போது, ஒரு புது டைரக்டர், புது ஜானர் அப்படி மக்கள் வந்து பார்த்து பெரிய ஹிட்டாகுச்சு. எக்ஸ்பிரிமென்டல் கதைகள் எல்லாம் நாங்க ஓடிடி-க்குப் பண்றோம்.
சில படங்களில் யார் நடித்தால் நல்லாயிருக்கணும்னு சொல்லுங்க?
முள்ளும் மலரும் படத்தை இப்போது எடுத்தால் தனுஷ் நடித்தால் நல்லாயிருக்கும்.
பேட்ட - தலைவர் ரஜினி தான். வேறு யாரையும் நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது’’ என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.
நன்றி: பிஹைண்ட் வுட்ஸ்
டாபிக்ஸ்