தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்!

Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்!

Marimuthu M HT Tamil
May 18, 2024 07:16 PM IST

Actress Husband Also Died: தெலுங்கு நடிகர் சந்திரகாந்த், தனது மனைவி பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்!
Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்! (Instagram)

ட்ரெண்டிங் செய்திகள்

தெலங்கானாவின் அல்காபூரில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் சந்திரகாந்த், மே17ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், அவரது சக நடிகையும் அவரது மனைவியுமான பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் இறந்த சில நாட்களுக்குள், அவரது மரணச் செய்தி வந்துள்ளது தெலுங்கு சீரியல் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சந்திரகாந்தின் இறுதி மனோநிலை:

இதுதொடர்பாக, சந்திரகாந்தின் தந்தை போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ’தனது மகனும் நடிகருமான சந்திரகாந்த், மனைவி பவித்ரா இறந்த துக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக மனச்சோர்வுடன் இருந்தார்’ எனத் தெரிவித்துள்ளார்.

தனது மனைவி பவித்ரா ஜெயராமின் மறைவில், பாதிக்கப்பட்டு மிகவும் நொந்துபோயிருந்த நிலையில் சந்திரகாந்த் தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில் தனது மறைந்த மனைவி பற்றி உருக்கமாக எழுதியிருந்தார்.  

அதில்,  ‘’ இது நான் உன்னுடன் சேர்ந்து எடுத்த கடைசிப் படம். என்னை தனியாக விட்டுச் சென்றதை ஜீரணிக்க முடியவில்லை. ஒரு தடவை மாமா என்று கூப்பிடு பிளீஸ் பவித்ரா. என் மனைவி இனி இல்லை. தயவு செய்து திரும்பி வந்துவிடு, ப்ளீஸ்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தயவு செய்து வந்து என் கண்ணீரைத் துடைத்துவிடு என்று, தனது இன்ஸ்டாகிராம் கதையில் தெரிவித்துள்ளார். 

யார் இந்த பவித்ரா ஜெயராம்?:

பிரபல கன்னட மற்றும் தெலுங்கு டிவி நடிகை பவித்ரா ஜெயராம்.  கன்னடாவில் ஒளிபரப்பான ஜோகாளி என்ற டிவி சீரியலில் நடிகையாக அறிமுகமானவர், பவித்ரா. 2018இல் தெலுங்கு சீரியலில் அறிமுகமானார். தெலுங்கில் பிரபலமான ’திரிநயனி’ என்ற சீரியலில் ’திலோத்தமா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

ஏராளமான டிவி சீரியல்களில் நடித்துள்ள பவித்ரா ஜெயராம், திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். சீரியல் நடிகை பவித்ராவின் கணவர் சந்திரகாந்தும் ஒரு சீரியல் நடிகர். இத்தம்பதிகளுக்கு மகன், மகள் ஆகியோர் இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் பிரபலமாக இருந்து வரும் இவருக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருக்கின்றனர். டிவி சீரியல்களில் அம்மா வேடத்தில் தோன்றி, கவர்ந்தவராக பவித்ரா ஜெயராம் இருந்து வந்தார்.

35 வயதாகும் பவித்ரா ஜெயராம், தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நிர்வகித்து வந்துள்ளார். ஷுட்டிங் ஷாப்ட் வீடியோக்களை அதிகமாகப் பகிர்ந்து வந்த பவித்ரா, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வீடியோக்களையும் பகிர்ந்து லைக்குகளை குவித்து வந்துள்ளார்.

நடிகையாக ஆவதற்கு முன் பவித்ரா ஜெயராம், லைப்ரேரியன், சேல்ஸ் கேர்ள் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் நோக்கி காரில் வந்து கொண்டிருக்கையில் ’திவிட்பள்ளி’ என்ற பகுதியில் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இவர் பயணம் செய்த கார் மீது பேருந்து மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

மனைவி பவித்ரா ஜெயராம் விபத்தில் இறந்த சோகத்தில், கணவன் சந்திரகாந்த் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல:

சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால், 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள்.

சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050;

மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104;

இணைய வழித்தொடர்புக்கு - 022-25521111;

மின்னஞ்சல் - help@snehaindia.org.

 (ஏஎன்ஐ)

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்