தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Manjummel Boys And Heres All About Its Telugu Versions Theatrical Release

Manjummel Boys: மஞ்சும்மல் பாய்ஸ்: தெலுங்கு வெர்ஷன் எப்போது வெளியாகிறது தெரியுமா?

Marimuthu M HT Tamil
Apr 04, 2024 03:04 PM IST

Manjummel Boys: மஞ்சும்மல் பாய்ஸின் வெற்றியைத் தொடர்ந்து இந்த சூப்பர் ஹிட் படத்தை தெலுங்கில் கொண்டு வர தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் வெளியீடு பற்றி நமக்குத் தெரிந்த தகவல்கள்!

மஞ்சும்மல் பாய்ஸ்
மஞ்சும்மல் பாய்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

சமீபத்தில், மற்றொரு வெற்றிப் படமான பிரேமத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ‘’மஞ்சும்மல் பாய்ஸ்'' என்ற படம் கணிசமான வெற்றியைப் பெற்றது.

மலையாள சர்வைவல் த்ரில்லரான மஞ்சும்மல் பாய்ஸ், 2006ஆம் ஆண்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஆம். கொச்சியைச் சேர்ந்த நண்பர்கள் குழுவினர், கொடைக்கானலுக்குப் பயணித்து, அங்குள்ள குணா குகையைப் பார்க்கச் செல்கின்றனர். அதில் ஒருவர் விழுந்துவிட மற்றவர்கள் எப்படி, குழியில் விழுந்தவரை மீட்டனர் என்பதுவே, படத்தின் கதை.

சிதம்பரம் எஸ். பொதுவல் இயக்கியுள்ள இப்படத்தில் சௌபின் ஷாஹிர், கணபதி, காலித் ரஹ்மான் மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்துள்ளனர். மேலும், மலையாளப் பார்வையாளர்களிடமும், மலையாளம் பேசாத பார்வையாளர்களிடமிருந்தும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது, மஞ்சும்மல் பாய்ஸ்.

மஞ்சுமேல் பாய்ஸ் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் தெலுங்கு பேசும் பகுதிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியாகியது. 

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பு, வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், தெலுங்கு பதிப்பின் திரையரங்க வெளியீட்டிற்கு முன்னர், மலையாள பதிப்பு ஓடிடி தளங்களில் கிடைக்கும் என்று வதந்திகள் இருந்தன. டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் மஞ்சும்மல் பாய்ஸ், வரும் ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஆந்திரா மற்றும் தெலங்கானா திரையரங்குகளில் போட்டி கடுமையாக உள்ளது. குறிப்பாக தில்லு ஸ்கொயர் மற்றும் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் ஆகியப் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸாகின்றன. இருந்தபோதிலும், போட்டி காரணமாக மஞ்சும்மல் பாய்ஸ் அதன் திரையரங்க ஓட்டத்தை ஒரு வாரம் வரை, தாக்குப்பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. 

ஒரு முக்கிய பான்-இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தெலுங்கு உரிமைகளை வாங்கியுள்ளது. இது இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்த மஞ்சும்மல் பாய்ஸை, டப் செய்து, தெலுங்கு பார்வையாளர்களுக்கு கோடைகால ஸ்பெஷலாக கொண்டு வருகிறது. 

இப்படத்தை பரவா பிலிம்ஸ் சார்பில் பாபு ஷாஹிர், சௌபின் ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோர் தயாரித்திருந்தனர். நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யலமஞ்சிலி தெலுங்கு பதிப்பை வழங்குகிறார்கள். ஷைஜு காலித் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுஷின் ஷியாம் இசையமைத்து இருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்தை அஜயன் சாலிசேரி மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு வடிவமைப்புப் பணியினை செய்துள்ளார். 

2006ஆம் ஆண்டில் கொடைக்கானலில் குணா குகையில் சிக்கிய நண்பரை மீட்ட எர்ணாகுளத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் என்னும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நிஜ வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது, மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்.

மஞ்சும்மல் பாய்ஸ் தெலுங்கு வெர்ஷனுக்குண்டான ட்ரெய்லர் இன்று மாலை 6 மணி 9 நிமிடங்களுக்கு வெளியாகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, தெலுங்கு மொழியில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்