Actress Died in Accident: ஹைதராபாத் அருகே சாலை விபத்தில் சிக்கி பிரபல டிவி நடிகை உயிரிழப்பு! நடிகை உறவினர் பலத்த காயம்
ஹைதராபாத் அருகே சாலை விபத்தில் சிக்கி பிரபல டிவி நடிகை உயிரழந்துள்ளார். நடிகை பவித்ரா ஜெயராம் பயணித்த கார் மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நடிகை உறவினர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல கன்னடா மற்றும் தெலுங்கு டிவி நடிகை பவித்ரா ஜெயராம். தெலுங்கில் பிரபலமான திரிநயனி என்ற சீரியலில் திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் மனதை கவரந்துள்ளார். இதையடுத்து இவர் தெலங்கானா மாநிலம் ஹைதரபாத் அருகே மெஹ்பூப்நகர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பெங்களுருவில் இருந்து ஹைதராபாத் நோக்கி காரில் வந்து கொண்டிருக்கையில் திவிட்பள்ளி என்ற பகுதியில் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இவர் பயணம் செய்த கார் மீது பேருந்து மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய பவித்ரா ஜெயராம்
இந்த விபத்து தொடர்பாக பூத்பூர் போலீசார் கூறியிருப்பதாவது, "ஞாயிற்று கிழமை இரவு 1 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நடிகை பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மத்தியில் இருந்த டிவைடர் மீது மோதியுள்ளது. காரின் பின்னே வந்த பேருந்து நடிகையின் கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக" தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உறவினர், கார் டிரைவர் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பவித்ராவின் உயிரழிப்பு கன்னடா, தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்புக்கு பிரபலங்கள், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த பவித்ரா ஜெயராம்?
கன்னடாவில் ஒளிபரப்பான ஜோகாளி என்ற டிவி சீரியலில் நடிகையாக அறிமுகமானவர் பவித்ரா. 2018இல் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். திலேத்தமா என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
ஏராளமான டிவி சீரியல்களில் நடித்துள்ள பவித்ரா ஜெயராம், திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். பவித்ராவுக்கு கணவர், மகன், மகள் ஆகியோர் இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் பிரபலமாக இருந்து வரும் இவருக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாலோயர்கள் இருக்கிறார்கள். டிவி சீரியல்களில் அம்மா வேடத்தில் தோன்ற ரசிகர்களை கவர்ந்தவராக பவித்ரா ஜெயராம் இருந்து வருகிறார்.
35 வயதாகும் பவித்ரா ஜெயராம், தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நிர்வகித்து வந்துள்ளார். ஷுட்டிங் ஷாப்ட் விடியோக்களை அதிகமாக பகிர்ந்து வந்த பவித்ரா, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடியோக்களையும் பகிர்ந்து லைக்குகளை குவித்து வந்துள்ளார்.
நடிகையாக ஆவதற்கு முன்னாள் லைப்ரேரியன், சேல்ஸ் கேர்ள் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
மேடையிலேயே உயிரழந்த மராத்தி நடிகர்
பழம்பெரும் மராத்தி மொழி நடிகரும், நாடக கலைஞருமான சதீஷ் ஜோஷி, மேடையில் நடித்து கொண்டிருக்கையில் திடீரென சரிந்து விழுந்து உயிரழ்ந்துள்ளார். அவரது இறப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விதமான கதாபாத்திரங்களில் தோன்ற மாராத்திய மொழி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருந்துள்ளார் சதீஷ் ஜோஷி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
