Tamil News  /  Entertainment  /  Special Article On The Death Anniversary Of Legendary Actress Pandari Bai

Legendary Actress Pandari Bai Memorial Day: கன்னட சினிமாவின் ஆச்சி பண்டரி பாய் நினைவுநாள் இன்று!

Marimuthu M HT Tamil
Jan 29, 2024 07:47 AM IST

பழம்பெரும் நடிகை பண்டரி பாயின் நினைவுநாள் குறித்த சிறப்புக்கட்டுரை..

பழம்பெரும் நடிகை பண்டரி பாய் நினைவுநாள்
பழம்பெரும் நடிகை பண்டரி பாய் நினைவுநாள்

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்த பண்டரி பாய்? சுதந்திரத்திற்கு முந்தைய பாம்பே மாகாணத்தின் பத்கல் பகுதியில் (தற்போதைய கர்நாடகா) 1930ஆம் ஆண்டு பிறந்தவர், பண்டரி பாய். இவரது இயற்பெயர் கீதா என்பதாகும்.

நடிப்பு வாழ்க்கை: பண்டரி பாய், தனது சிறுவயதில் மேடை நாடகங்களில் தோன்றி நடித்தவர். 1943ஆம் ஆண்டு முதல்முறையாக வாணி என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனவர். அதன்பின் தமிழில் ஹரிதாஸ், பக்த கோர கும்பரா, வேதாள உலகம், ராஜ விக்ரமா,, மர்மயோகி, பராசக்தி, குமாஸ்தா, பரதேசி, பூங்கோதை, திரும்பிப்பார், மனோகரா, நல்லகாலம், செல்லப்பிள்ளை, மலைக்கோட்டை மங்கை என வரிசையாகப் பல படங்களில் நடித்தவர். அதன்பின் கன்னட சினிமாவில் அதிகம் நடித்த பண்டரி பாய் அங்கு உச்ச நடிகையாகத் திகழ்ந்தார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் முதல் படமான பெதர கண்ணப்பாவிலும், சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தியிலும் அவர்களுக்கு முதல் ஹீரோயின், பண்டரி பாய் தான். அதனால் பல அறிமுக நடிகர்களுக்கு லக்கியான நபராக பண்டரி பாய் கருதப்பட்டார். தவிர, எம்.ஜி. ஆருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அதேபோல், தான் ஜோடி போட்டு நடித்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ராஜ்குமார் போன்ற நடிகர்களுக்குத் தாயாகவும் நடித்துள்ளார். இவரது நடிப்புத்திறனைப் பாராட்டி, 1965ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. தவிர, ஃபிலிம் பேர் விருது, கர்நாடகாவின் சிறந்த துணை நடிகைக்கான விருது, டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல அங்கீகார விருதுகளைப் பெற்றவர், பண்டரி பாய். இதையெல்லாம் தாண்டி, 'மன்னன்'படத்தில் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாற்றுத்திறனாளி தாயாக நடித்து பட்டித்தொட்டியெங்கும் அறியப்பட்டார், பண்டரி பாய்.

அத்தகைய பண்டரி பாய், 2003ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி சென்னையில் காலமானார். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், காலத்தால் அழியாத பல திரைச்சுவடுகளை நம்மிடம் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார், பண்டரி பாய் என்றால் அது மிகையல்ல.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.