தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dasara Collections: பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த தசரா

Dasara Collections: பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த தசரா

Aarthi V HT Tamil
Apr 06, 2023 12:53 PM IST

நானி நடித்த தசரா திரைப்படம் ஆறு நாட்களில் 100 கோடி ரூபாய்யை தாண்டியது.

தசரா
தசரா

ட்ரெண்டிங் செய்திகள்

நானி நடித்த தசரா படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்துள்ளது. ஆறு நாட்களில் தசரா இந்த சாதனையை எட்டியது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்த இப்படம் இன்னும் திரையரங்குகளில் கலக்கி வருகிறது. மேலும், நானியின் கேரியரில் 100 கோடியை தாண்டிய முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. இதனை சிறப்பு போஸ்டருடன் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். மேலும், இந்த வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் இப்படம் இன்னும் சில நாட்களில் 2 மில்லியன் டாலர் வசூலை எட்டிவிடும். அப்படி நடந்தால் நானியின் கேரியரில் இந்த சாதனையை படைத்த முதல் படமாக தசாரா அமையும். இந்த படத்தின் சூப்பர் வெற்றியால், தசரா படத்தின் தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி, திரைப்பட இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுக்கு பிஎம்ஐ காரை பரிசளித்தார். மேலும் படக்குழுவினருக்கு தலா 10 கிராம் தங்கத்தை பரிசாக வழங்கினார்.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருக்கும் தசரா திரைப்படம் ஒரு பீரியடிக் ஆக்ஷன் வகைப் படமாகும். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் இந்திய அளவில் வெளியானது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்