தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Custody Review: பார்த்தால் பிடிக்குமா? பார்க்க பார்க்க பிடிக்குமா? ‘கஸ்டடி’ விமர்சனம்!

Custody Review: பார்த்தால் பிடிக்குமா? பார்க்க பார்க்க பிடிக்குமா? ‘கஸ்டடி’ விமர்சனம்!

Kalyani Pandiyan S HT Tamil
May 12, 2023 12:31 PM IST

வழக்கம் போல் பிரேம் ஜி காமெடி என்ற பேரில் தேவையில்லாத லக்கேஜ்

கஸ்டடி படத்தின் போஸ்டர்
கஸ்டடி படத்தின் போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல்வர் தொடர்பான அனைத்து ரகசியங்களையும் தெரிந்து வைத்திருக்கும் ராசுவை சிபிஐ அதிகாரி ஒருவர் கையும் களவுமாக பிடிக்கிறார். ராசு வாய் திறந்தால் நம் வண்டவாளம் தண்டவாளம் ஏறி விடும் என்று அஞ்சும் முதல்வர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவரை எப்படியாவது தீர்த்துக்கட்ட முயற்சிகள் எடுக்கிறார்.

இதில் திடீரென உள்ளே புகும் கான்ஸ் டபுள் சிவா ராசுவை காப்பாற்றி சிபிஐ அதிகாரிக்கு உதவுகிறார. அரசுப்பணியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக வேலைப்பார்க்கும் பரபர சேசிங் திரைக்கதையில் ஒரு இடத்தில் சிவாவின் காதலியும் வந்து ஒட்டிக்கொள்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது? ராசு என்ன ஆனான்? சிவாவின் ஏன் ராசுவை காப்பாற்ற வேண்டும்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலே படத்தின் கதை!

கான்ஸ்டபுள் சிவாவாக நடித்திருக்கும் நாக சைதன்யாவின் நடிப்பு ஆக்ஷன் காட்சிகளில் மிளிரிய அளவு இன்ன பிற காட்சிகளில் மிளிரவில்லை. இன்னும் நிறைய தேற வேண்டி இருக்கிறது. 

கீர்த்தி நாக சைதன்யா இடையேயான காதல் காட்சிகள் ஓகே என்றாலும், அவை நாம் ஏற்கனவே பார்த்து பழகிய பழைய காட்சிகள் என்பதால் அதுவும் கமர்ஷியல் படத்திற்கான காதலாகவே கடந்து சென்று விட்டது.

படத்தின் ஆகப்பெரும் பலம் சரத்குமாரும், அரவிந்த் சாமியும்தான். சரத்குமார் ஒரு பக்கம் வில்லனாக மிரட்ட, இன்னொரு பக்கம் அரவிந்த் தன்னுடைய அசாலட் பாடி லாங்குவேஜால் அதகளம் செய்கிறார். இவர்கள் இருவரும் தான் படத்தை கொஞ்சம் என் கேஜிங்காக கொண்டு செல்கிறார்கள். பிரியாமணிக்கும் இன்னும் கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.

வழக்கம் போல் பிரேம் ஜி காமெடி என்ற பேரில் தேவையில்லாத லக்கேஜ். நிறைய தமிழ் நடிகர்கள் இருந்த போதும் படத்தில் தெலுங்கு வாடை கொஞ்சம் தூக்கலாகவே தெரிந்தது. அது சில இடங்களில் படத்தில் இருந்து நம்மை அந்நியப்படுத்தவும் செய்தது.

வெங்கட் பிரபு ஆக்ஷனை நன்றாக கையாண்டு இருந்தாலும், படத்தின் கதையிலும் திரைக்கதையிலும் சுவாரசியம் இல்லாத காரணத்தால் கொஞ்ச நேரத்தில் படம் நமக்கு தோய்வை ஏற்படுத்த தொடங்கி விடுகிறது. 

ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படத்தின் ஒரே ஆறுதல். ஸ்டண்ட் சிவாவும்,மகேஷ் மேத்யூம் தங்களது பணியினை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கேமராமேன் கதிரின் ஒளிப்பதிவு நம்பகத்தன்மையை கூட்டி இருக்கிறது. பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் மாநாடு பின்னணி இசையின் சாயல் தெரிந்தது. இருப்பினும் ரசிக்க முடிந்தது. கதையில் புதுமை இல்லாத காரணத்தால் கஸ்டடி சுமார் என்ற கட்டத்தில் அடைபட்டு விட்டான்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்