Cook With Comali: ரக்ஷனின் கோ ஆங்க்கர் இவங்க தானா? ஓப்பனிங்கே ஹாப்பனிங்.... கவுண்டர் கொடுத்த குரேஷி-cook with comali team mocks manimegalai on their promo - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: ரக்ஷனின் கோ ஆங்க்கர் இவங்க தானா? ஓப்பனிங்கே ஹாப்பனிங்.... கவுண்டர் கொடுத்த குரேஷி

Cook With Comali: ரக்ஷனின் கோ ஆங்க்கர் இவங்க தானா? ஓப்பனிங்கே ஹாப்பனிங்.... கவுண்டர் கொடுத்த குரேஷி

Malavica Natarajan HT Tamil
Sep 29, 2024 01:22 PM IST

Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளர் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ப்ரமோ தற்போது வெளியான நிலையில், புதிய ஆங்க்கரின் ஓப்பனிங் ஹாப்பனிங்காக உள்ளது என குரேஷி கிண்டல் செய்துள்ளார்.

Cook With Comali: ரக்ஷனின் கோ ஆங்க்கர் இவங்க தானா? ஓப்பனிங்கே ஹாப்பனிங்.... கவுண்டர் கொடுத்த குரேஷி
Cook With Comali: ரக்ஷனின் கோ ஆங்க்கர் இவங்க தானா? ஓப்பனிங்கே ஹாப்பனிங்.... கவுண்டர் கொடுத்த குரேஷி

புதிய ஆங்க்கர்

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து வரும் வாரத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கான புதிய ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில், மணிமேகலைக்குப் பதிலாக புதிய ஆங்க்கர் வந்துள்ளதாக ரக்ஷன் கூறுகிறார். பின் அவருக்கான வரவேற்பும் வழங்கப்படுகிறது.

புதிய ஆங்க்கராக யார் வந்துள்ளார் என ரசிகர்கள் ஆவலோடு பார்த்தால், விடிவி கணேஷ் தான் அந்த ஆங்க்கர். இவருக்கு ஆங்க்கரிங் செய்வது எப்படி, நிகழ்ச்சியை எப்படி தொடங்க வேண்டும் என பலமுறை ரக்ஷன் சொல்லிக் கொடுத்தும் அது சரியாக அமையவில்லை. இதையடுத்து, குரேஷி, இது குக் வித் கோமாளியின் ஓப்பனிங் அல்ல, ஹாப்பனிங் என கிண்டலடித்துள்ளார். இது சிரிப்பலையை ஏற்படுத்தினாலும், மறைமுகமாக மணிமேகலையை குத்திக் காட்டுவது போல் அமைந்துள்ளது.

மணிமேகலையை குத்திக் காட்டும் புகழ்

இதற்கு அடுத்ததாக வெளியான ப்ரமோவில், அங்கராக களமிறங்கி உள்ளார் புகழ். இதில், அவர் கடந்த வாரம் நடந்த ஷோவிலிருந்து 2 பேரை எடுத்திருக்கோம் என புகழ் கூறுகிறார். இதைக் கேட்ட ராமர், எடுத்திருக்கோம் என்றால் நிகழ்ச்சியிலிருந்து நீக்கி விட்டோம் என அர்த்தமாகும். எனவே, செலக்ட் செய்துள்ளோம் என சொல்லுமாறு கூறினார்.

இதற்கு உடனே பதிலளித்த புகழ், நீங்க ஒரு தொகுப்பாளரை இழிவு படுத்துறீங்க… மரியாதை கொடுங்க ,இல்லன்னா நிகழ்ச்சியை விட்டு வெளியே போங்க என்று பேசுகிறார்.

இவரின் இந்தப் பேச்சுக்கு மொத்த அரங்கமே சிரிக்கிறது. இந்நிலையில், புகழ் வெளிப்படுத்திய இந்த வார்த்தைகளும் மணிமேகலையின் கேரக்டரை வெளிப்படுத்துவது போன்ற வெளிப்படையாக தெரிகிறது.

மறைமுகத் தாக்குதல்

இந்த நிலையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஒருவரை அங்குள்ள அனைவரும் அதாவது பிரியங்காவிற்கு ஆதரவு தரும் விதமாக, பல கருத்துகளை மறைமுகமாக தெரிவிப்பது போன்றே தெரிகிறது.

இதனால், தனிப்பட்ட இருவரின் விவகாரத்தை ஒரு மொத்த நிகழ்ச்சியும் கையிலெடுத்து தேவையற்ற மறைமுக தாக்குதல்களை அளிக்கிறது. மேலும், இந்தப் பிரச்சனையை முடிக்க விடாமல் தொடர்ந்து இழுத்து வருகிறது என பலரும் கூறி வருகின்றனர்.

மணிமேகலை காட்டம்

முன்னதாக, தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியும், தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையிலும் மணிமேகலை அவரது காதல் கணவர் ஹுசைனுடன் இணைந்து அவரது ஹூசைன் மணிமேகலை யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிரியங்காவிற்கு ஆதரவு தருபவர்களை மணிமேகலை சொம்பு என விமர்சித்திருந்தார்.

அதற்கு, மாகாபா ஆனந்த், டிஜே பிளாக், சரத், வனிதா உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் காட்டமான கருத்து தெரிவித்திருந்த நிலையில், மணிமேகலை எந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாரோ அதே நிகழ்ச்சியில் அவர் குறித்து மறைமுகமான தாக்குதல்களை நடத்தி வருகிறது பலரையும் இந்த விவகாரம் குறித்து பேச வைக்கும் விதமாக அமைகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.