Vanitha vijayakumar: “நாங்க உனக்கு செம்பா…? ரொம்ப ரொம்ப தப்பு பண்ற.. பிரியங்கா நல்ல பொண்ணு” -மணிமேகலையை வெளுத்த வனிதா!
Vanitha vijayakumar: நமக்கு தகுந்த மரியாதை இருக்கும் இடத்தில்தான் நாம் இருக்க வேண்டும். ஒரு இடத்தில் நமக்கு மரியாதை இல்லை என்றால், நாம் அந்த இடத்தில் இருக்க கூடாது. அதுதான் சரி. மணி, பிரியங்கா என இருவருமே சுயமரியாதை கொண்டவர்கள் தான். - வனிதா!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போதே, பிரியங்காவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு செட்டை விட்டு வெளியேறினார் மணிமேகலை. பின், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக பேசாமல், தன்னுடைய யூடியூப் சேனலில், அங்கு நடந்தவற்றை பேசி, பிரச்சினையை வெடிக்க வைத்தார்.
பிரச்சினையை வெடிக்க வைத்த மணி!
இந்த நிலையில் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில், குரேஷி உள்ளிட்ட சிலர் பிரியங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த நிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக, மணிமேகலை அண்மையில் தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்ட ஒரு வீடியோவில், செம்பை காண்பித்து, பிரியங்காவிற்கு ஆதரவாக நின்றவர்களை மறைமுகமாக கிண்டல் அடித்திருந்தார். இதற்கு தற்போது மாகாபா, டி.ஜே ப்ளாக் உள்ளிட்டோர் எதிர்வினை ஆற்றி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து வனிதா விஜயகுமார் பேசி இருக்கிறார்.