Cook With Comali: சுயமரியாதை சண்டை... கண்டுகொள்ளப்படாத ரக்ஷன்... காரணம் என்ன?-cook with comali set fight what is anchor rakshan reaction - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: சுயமரியாதை சண்டை... கண்டுகொள்ளப்படாத ரக்ஷன்... காரணம் என்ன?

Cook With Comali: சுயமரியாதை சண்டை... கண்டுகொள்ளப்படாத ரக்ஷன்... காரணம் என்ன?

Malavica Natarajan HT Tamil
Sep 22, 2024 06:01 PM IST

Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலையில் வேலையை செய்ய விடாமல் பிரியங்கா தடுத்ததாக கூறப்படும் நிலையில், மற்றொரு ஆங்க்கரான ரக்ஷனும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Cook With Comali: சுயமரியாதை சண்டை... கண்டுகொள்ளப்படாத ரக்ஷன்... காரணம் என்ன?
Cook With Comali: சுயமரியாதை சண்டை... கண்டுகொள்ளப்படாத ரக்ஷன்... காரணம் என்ன?

விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், தொகுப்பாளராக இருந்து பிரபலமடைந்து தற்போது நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று வந்த பிரியங்காவிற்கும் பிரச்சனை வெடித்துள்ளது.

இதனால், நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே பாதியில் வெளியேறிய மணிமேகலை, பின்னர் நிகழ்ச்சியிலிருந்து முற்றிலும் வெளியேறுவதாக அறிவித்தார். இதற்கு காரணமாக அவர் கூறிய விஷயம் தான் தற்போது பேசுபொருளே.

சுயமரியாதை முக்கியம்

குக் வித் கோமாளியில் குக்காக வந்த ஆங்க்கர் ஒருவர் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். எனக்கு சுயமரியாதை முக்கியம். பிச்சை எடுத்தாவது நான் பிழைப்பேன் என காட்டாமாக கூறியுள்ளார்.

இந்த கருத்தை அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்ட உடனேயே பற்றியது காட்டுத் தீ. சரசரவென பலரும் அங்கு என்ன நடந்தது. மணிமேகலை ஏன் அவ்வாறு கூறினார். அவர் கூறுவது உண்மை தானா என எதையும் ஆராயாமல் இரண்டு கேங் பிரிந்தது. முட்டவும் மோதவும் ஆரம்பித்தது.

சோசியல் மீடியா ட்ரெண்டிங்

இதையடுத்து, பல்வேறு விதமான தனிப்பட்ட தாக்குதல்கள், காது கொடுத்து கேட்க முடியாத கமெண்டுகள், குடும்ப உறுப்பினர்களை அவமானப்படுத்துவது இத்துடன் மொழி, இனப் பிரச்சனை, வதந்திகள் என போதும் போதும் என தகவல்களும் கருத்துகளும் பரவி வருகிறது.

இது போதாதென்று, நிகழ்ச்சிக்கு உள்ளே இருந்தவர்களின் பார்வை, வெளியே இருந்தவர்களின் பார்வை, காதில் கேட்ட தகவல்களை வைத்து கருத்து, கேள்விப்பட்ட கருத்து, சொந்த கருத்து என பல கருத்துகளும் நம்மை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

மணிமேகலையிடம் திரும்பிய கேள்வி

இந்த நிலையில், குக் வித் கோமாளியில் கடந்த 4 சீனனாக தனி ஒரு நபராக ஆங்க்கரிங் செய்து வந்த ரக்ஷன் மணிமேகலையால் தன்னுடைய வேலை பறிபோனது என கூறியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என தற்போது கருத்துகள் உலா வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமன்றி, தன்னுடைய வேலையில் பிரியங்கா தலையிடுகிறார் என்றால், கண்டிப்பாக ரக்ஷனின் வேலையையும் அவர் பாதிக்க செய்திருப்பார். அப்படி என்றால் ரக்ஷன் இதுகுறித்து எதுவும் கூறாதது ஏன்? இவர்களது குடுமிப்பிடி சண்டையில் ரக்ஷன் இழுக்கப்படாதது ஏன்? என்றும் காலம் போன காலத்தில் ஒரு குரூப் குரல் கொடுத்து இந்த பிரச்சனையை முடிக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது.

ரக்ஷனின் ரியாக்ஷன்

இந்நிலையில், மணிமேகலை- பிரியங்கா சண்டை குறித்து ரக்ஷனிடம் கேள்வி எழுப்பிய போது, மணிமேகலை சொல்வது உண்மை தான். நான் பிரியங்கா அக்காவின் ஜூனியர். எனவே, அவர் ஏதாவது அட்வைஸ் செய்தால் ஏற்றுக் கொள்வேன். ஆனால், மணிமேகலை பல ஆண்டுகளாக ஆங்க்கராக உள்ளார். இதனால், பிரியங்கா அக்காவின் அட்வைஸ் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ரக்ஷனின் சுயமரியாதை முக்கியம் இல்லையா?

நிலமை இப்படி இருக்க, மணிமேகலை பிரியங்காவை பார்த்து கேட்ட அனைத்து கேள்விகளையும், ரக்ஷன் இப்போது உங்களைப் பார்த்து கேட்டால் என்ன ஆகும்? இதுவரை வெளியான அனைத்து சீசன்களிலும் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து அனைவரையும் சந்தோஷப்படுத்திய ரக்ஷனின் வேலையை நீங்கள் பறித்துள்ளீர்கள். கோமாளியாக இந்த சீசன் வர என்னால் முடியாது. ஆங்க்கராக வேண்டுமென்றால் வருகிறேன் என கூறித்தான் இந்த சீசனுக்கே நீங்கள் வந்துள்ளீர்கள் என தகவல்களும் ஒருபுறம் கசிந்த வண்ணமாக இருக்கிறது. இப்படி இருக்க ரக்ஷனின் சுயமரியாதை இங்கு முக்கியம் இல்லையாய? என ஒரு தரப்பு மணிமேகலையை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறது.

ஆனால், ரக்ஷனோ இந்த சண்டையில் கவனத்தை சிதறவிடாமல் குக் வித் கோமாளியின் ஆங்கரிங் வேலையில் பிசியாக உள்ளார். அத்துடன் தன்னுடைய சினிமா கனவுகளையும் விஜய் டிவியில் இருந்து கொண்டே நிறைவேற்றி வருகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.