தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: 3 வது போட்டியாளராக சிவாங்கி;கடைசியாக நடுவர்கள் வைத்த ட்விஸட்; இவர்கள்தான் குக் வித் கோமாளி பைனலிஸ்ட்ஸ்

Cook with Comali: 3 வது போட்டியாளராக சிவாங்கி;கடைசியாக நடுவர்கள் வைத்த ட்விஸட்; இவர்கள்தான் குக் வித் கோமாளி பைனலிஸ்ட்ஸ்

Kalyani Pandiyan S HT Tamil
Jul 09, 2023 12:51 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு தேர்வான போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன

Cook with comali season 4 finalist list
Cook with comali season 4 finalist list

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், ஜிபி முத்து ஓட்டேரி சிவா, ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்றனர்.  

குக்குகளாக அகிஷார் ராஜ்குமார், விஜே விஷால், ராஜ ஐயப்பா, காளையன், ஷெரின், கஜேஷ், ஆண்ட்ரியன் ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் சிவாங்கி, விசித்ரா, மைம் கோபி, ஸ்ருஷ்டி, கிரண் ஆகியோர் போட்டியில் இருந்தனார். இந்த நிகழ்ச்சியின் அரைஇறுதி சுற்று இந்த வாரம் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் இருந்து மூன்று நபர்களை இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்போவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி, இறுதி சுற்றின் இரண்டாவது போட்டியாளராக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து மூன்றாவது போட்டியாளராக சிவாங்கி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் கிரண் வெளியேற்றப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கிரண் ஐந்தாவது போட்டியாளராக கிரண் தேர்ந்தெடுக்கப்படுவதாக  நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலமாக நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். வைல்டு கார்டு சுற்றில் இருந்து ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்