தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: ’ரவுடிசம்.. நடவடிக்கை எடுங்க’ - நடிகர் விஜய் மீது புகார்

Vijay: ’ரவுடிசம்.. நடவடிக்கை எடுங்க’ - நடிகர் விஜய் மீது புகார்

Aarthi V HT Tamil
Jun 26, 2023 11:12 AM IST

நடிகர் விஜய் மீது சமூக ஆர்வலர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

லியோ
லியோ

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் லியோ பட பாடல் ரவுடிசத்தை உருவாக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி நடிகர் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விஜய் மீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் லியோ பாடல் இருக்கிறது. அதனால் லியோ படத்தின் நா ரெடி பாடலை தடை செய்ய வேண்டும்.

போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் உருவாக்கப்பட்டு உள்ளது. அதனால் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து இருக்கிறது.

இவர்களுடன் இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், நடிகர் அர்ஜூன், நடிகர் சஞ்சய் தத், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு முன்னதாக விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடித்த நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்ததாகவும் கூறப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. மேலும் லியோ படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்