Tamil Movies: ரேஸில் வென்ற எம்ஜிஆர்..வில்லத்தனத்தில் மிரட்டிய பாக்யராஜ்! இன்றைய நாளில் ரிலீசான முக்கிய படங்கள் லிஸ்ட்-check out the list of tamil films released on this day sep 21 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies: ரேஸில் வென்ற எம்ஜிஆர்..வில்லத்தனத்தில் மிரட்டிய பாக்யராஜ்! இன்றைய நாளில் ரிலீசான முக்கிய படங்கள் லிஸ்ட்

Tamil Movies: ரேஸில் வென்ற எம்ஜிஆர்..வில்லத்தனத்தில் மிரட்டிய பாக்யராஜ்! இன்றைய நாளில் ரிலீசான முக்கிய படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 21, 2024 07:48 AM IST

Tamil Movies Relesed on Sep 21: சிவாஜி கணேசன் - எம்ஜிஆர் இடையிலான ரேஸில் வென்ற எம்ஜிஆர், வில்லத்தனத்தில் மிரட்டிய பாக்யராஜ் நடித்த படம், கமல்ஹாசனுக்கு ஹிட்டாக அமைந்த மசாலா படம் என இன்றைய நாளில் ரிலீசான முக்கிய படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

Tamil Movies: ரேஸில் வென்ற எம்ஜிஆர்..வில்லத்தனத்தில் மிரட்டிய பாக்யராஜ்! இன்றைய நாளில் ரிலீசான முக்கிய படங்கள்
Tamil Movies: ரேஸில் வென்ற எம்ஜிஆர்..வில்லத்தனத்தில் மிரட்டிய பாக்யராஜ்! இன்றைய நாளில் ரிலீசான முக்கிய படங்கள்

வாழ்விலே ஒரு நாள்

சிவாஜி கணேசன், ஜி. வரலட்சுமி, ராஜ சுலேசனா, வி.கே. ராமசாமி உள்பட பலர் நடித்திருக்கும் பேமிலி ட்ராமா படமான வாழ்விலே ஒரு நாள் 1956இல் வெளியானது. ஏ. காசிலிங்கம் இயக்கிய இந்த படம் சிவாஜி கணேசனுக்கு முக்கிய படமாக அமைந்தது. பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் அவரது ரசகர்களால் கொண்டாடப்பட்ட படமாக உள்ளது.

தாய்க்கு பின் தாரம்

எம்ஜிஆர், பி பானுமதி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க எம்.ஏ. திருமுகன் இயக்குநராக அறிமுகமான தாய்க்கு பின் தாரம், சிவாஜி கணேசனின் வாழ்விலே ஒரு நாள் படத்துடன் போட்டியாக அதே நாளில் வெளியானது.அத்துடன் சாண்டோ சின்னப்ப தேவர் தனது தேவர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த முதல் படமும் இதுதான்.

தாய், மனைவி செண்டிமென்டை அடிப்படையாக வைத்து அமைந்திருக்கும் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. கே.வி. மகாதேவன் இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 100 நாள்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் ரேசில் வெற்றி பெற்ற இந்த படம் வெளியாகி இன்றுடன் 68 ஆண்டுகள் ஆகிறது.

மங்கள வாத்தியம்

கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, ஒய்.ஜி. மகேந்திரன், நாகேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க கே. சங்கர் இயக்கி 1979இல் வெளியாகி இருக்கும் மங்கள வாத்தியம் படம் பக்கா கமர்ஷியல் அம்சங்கள் இருந்தபோதிலும் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. கமல் ஹீரோவாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் படம் வெளியாக அவரது ரசிகர்களை திருப்திபடுத்தியது. சராசரி ஹிட்டாக அமைந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகிறது.

கன்னி பருவத்திலே

ராஜேஷ், வடிவுக்கரசி, கே. பாக்யராஜ் நடிப்பில் கிராமத்து பின்னணி கதையாக அமைந்திருக்கும் கன்னி பருவத்திலே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 1979இல் கமலின் மங்கள வாத்தியம் படத்துடன் வெளியான இன்த படத்ததை பாலகுரு இயக்கியிருப்பார்.

படத்தில் பாக்யராஜ் வில்லத்தனமாக கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சங்கர் கணேஷ் இயக்கத்தில் படத்தில் இடம்பிடித்திருக்கும் பட்டு வண்ண ரோசாவாம் என்ற பாடல் சிறந்த மெலடியாக இன்று வரையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. கமலுடனான ரேஸில் வெற்றி பெற்ற இந்த படம் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகிறது

மங்கம்மா சபதம்

கமல்ஹாசன், சுஜாதா, மாதவி, சத்யராஜ் நடிப்பில் மசாலா திரைப்படமாக வெளியான மங்கம்மா சபதம் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டானது. 1985இல் கே. பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் இந்தியில் ஹிட்டான கசம் பைடா கர்னே வாலே கி என்ற படத்தில் ரீமேக் ஆகும்.

படத்தில் கமல், சத்யராஜ் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கமலுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த மங்கம்மா சபதம் வெளியாகி இன்றுடன் 39 ஆண்டுகள் ஆகிறது

சாத்தான் சொல்லை தட்டாதே

மறைந்த இயக்குநர் ராம நாராயணன் இயக்கத்தில் பேண்டஸி காமெடி படமாக வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படம் சாத்தான் சொல்ல தட்டாதே. 1990இல் வெளியான இந்த படத்தில் பாண்டியன், சந்திரசேகர், செந்தில், எஸ். எஸ். சந்திரன், கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

வயலினில் அடைப்பட்டு கிடக்கும் சாத்தான் கதாபாத்திரத்தில் செந்தில் தோன்றியிருப்பார். படத்தில் அவர் பேசும் டிங் டிங் டிகானா, டங் டங் டகானா மிகவும் பிரபலமானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வெளியாகி இன்றுடன் 34 ஆண்டுகள் ஆகிறது

பாண்டவர் பூமி

சேரன் இயக்கத்தில் காதல் கலந்த குடும்ப திரைப்படமாக 2001இல் வெளியான படம் பாண்டவர் பூமி. அருண் விஜய், ஷமிதா, ராஜ்கிரண், சந்திரசேகர், ரஞ்சித், மனோரமா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் சூப்பர் ஹிட்டானது. பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வென்றது.

பரத்வாஜ் இசையில் தோழா தோழா, அவரவர் வாழ்க்கையில் பாடல்கள் இப்போது ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்களாக இருக்கின்றன. குடும்ப பாசம், காதல், விவசாயத்தின் மகத்துவம் என பல்வேறு விஷயங்களை பேசிய இந்த படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது.

சாமி ஸ்கொயர்

விக்ரம் - ஹரி கூட்டணியில் சூப்பர் ஹிடடான சாமி படத்தின் இரண்டாம் பாகமாக சாமி ஸ்கொயர் 2018இல் வெளியானது. இந்த பாகத்தில் கீரித்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாப சிம்ஹா, பிரபு உள்பட பலரும் நடித்திருப்பார்கள். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் முதல் பாகம் அளவில் இல்லை என்றாலும் விக்ரம் ரசிகர்களை கவர்ந்து சராசரி ஹிட்டானது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.