Arun Vijay: வில்லனாக அருண் விஜய்..?முக்கிய கேரக்டரில் தனுஷ் - கிராமத்து பின்னணியில் உருவாகும் படம் - முழு விவரம்
Dhanush And Arun Vijay: நான்காவது படத்தை இயக்க தயாராகும் நடிகர் தனுஷ்,அந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளாராம். கிராமத்து பின்னணியில் உருவாகும் கதையில் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் தனுஷ், தனது 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்தார். கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை அள்ளியது.
ரூ. 200 கோடி வசூலை ஈட்டிய முதல் தனுஷ் படம் என்ற பெருமையை ராயன் பெற்றுள்ளது. தற்போது குபேரா என்ற படத்தில் நடித்து வரும் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
தனுஷ் இயக்கும் நான்காவது படம்
பவர் பாண்டி என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நடிகர் தனுஷ், அதன் பின்னர் இரண்டாவதாக ராயன் படத்தை இயக்கினார். தான் இயக்கிய முதல் இரண்டு படங்களிலும் அவரே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து மூன்றாவது படமாக தனுஷ் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ப்ரியா பிரகாஷ் வாரியர். அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ் என இளம் நடிகர்கள் நடிக்கிறார்கள்.
ரெமான்டிக் காமெடி பாணியில் உருவாகும் இந்த படத்தை தனது உண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் தயாரிக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்க இருக்கும் நான்காவது படத்தில் அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்கிறார். முதல் முறையாக இன்னொரு ஹீரோவை இயக்க இருக்கும் தனுஷ், இந்த படத்தை முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் இந்த படம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராமத்து பின்னணியில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
டிசம்பர் ரிலீஸ்
இளைஞர்களை கவரும் விதமாக உருவாகி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை வரும் டிசம்பரில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்து வரும் குபேரா படமும் டிசம்பரில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் குபேரா படம் வெளியாக இருக்கிறது.
தனுஷ் மீதான ரெட் கார்டு நீக்கம்
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ""தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ள சூழ்நிலையில், அவர் நடிக்கும் புதிய படங்களைத் தொடங்குவதற்கு முன் தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் தனுஷுக்கு புதிய படங்களில் நடிக்க ரெட் கார்டு விதிக்கப்பட்டது.
பிரபல தயாரிப்பு நிறுவனங்களிடம் அட்வான்ஸ் தொகை பெற்று அவர்களின் படங்களில் நடிக்காமல் இழுத்தடித்ததாகவும், அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்காமல் தனுஷ் இருந்ததாக எழுத்த புகாரை அடுத்து இந்த ரெட் கார்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
தற்போது இந்த விவகாரத்தில், தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த இரு நிபந்தனைகளுக்கு தனுஷ் ஒப்புக்கொண்டதால் அவர் மீதான ரெட் கார்டு தடையை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பது, பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்திடம் பெற்ற அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்துவது என இரு நிபந்தனைகளுக்கு தனுஷ் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/