Bhagyaraj latest interview: முந்தானை முடிச்சு கொடுத்த கிக்.. தியேட்டருக்கு ஓடிய சிவாஜி வீட்டு பெண்கள்! - கே. பாக்யராஜ்!
அன்றைய சந்திப்பில் இன்னொரு சுவாரசியமான சம்பவமும் நடந்தது. அவர் என்னை பார்த்து... பாக்கி நீ ரொம்ப மோசம் என்றார். சிவாஜி சார் அப்படி சொன்னவுடன் எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. - கே. பாக்யராஜ்!

கே.பாக்கியராஜ் நேர்காணல்!
தாவணிக்கனவுகள் கதையை எழுதி முடித்தவுடன், அந்தக் கதையில் ஒரு ஓய்வு பெற்ற மிலிட்டரி ஆபீசர் கேரக்டர் இடம் பெற்று இருந்தது. அந்த கேரக்டரை நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியில் வாழ்வது போல வடிவமைத்து இருந்தேன். அந்த கேரக்டரில் நடிகர் சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. இதனையடுத்து அவரிடம் கதை சொல்ல சென்றேன்.
என்னை பார்த்தவுடன் அவர் வா பாக்கி... என்று ஏற்கனவே நான் அவருக்கு பரிச்சயமானவர் போல பேசினார். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. காரணம் என்னை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் பாக்கி என்று அழைக்க மாட்டார்கள்.
இதனையடுத்து நான் அவருக்கு கதையை விவரித்தேன் கதை அவருக்கு பிடித்திருந்தது. படம் செய்யலாம் என்று ஒத்துக் கொண்டார்.