தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Rs Sivaji: ‘குலுங்க குலுங்க சிரிக்க வைத்த குணச்சித்திரம்’ நடிகர் ஆர்.எஸ் சிவாஜி காலமானார்!

RIP RS Sivaji: ‘குலுங்க குலுங்க சிரிக்க வைத்த குணச்சித்திரம்’ நடிகர் ஆர்.எஸ் சிவாஜி காலமானார்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 02, 2023 12:08 PM IST

RS Sivaji passed away: நடிகர் ஆர். எஸ். சிவாஜி சிறந்த குணச்சித்திர நடிகர் ஆவார். 66 வயதான அவர் இன்று காலமானார்.

ஆர்.எஸ்சிவாஜி
ஆர்.எஸ்சிவாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளர். கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களில் இவர் அதிகமாக நடித்துள்ளார். இவர் உதவி இயக்குநராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும், லைன் புரொடியூசராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

சிவாஜி முதன்மையாக நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 1980 கள் மற்றும் 1990 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்தார். இவர் சார்! நீங்க எங்கயோ போயிட்டீங்க என்று அபூர்வ சகோதரர்கள் (1989) படத்தில் ஜனகராஜை பார்த்து பேசிய வசனம் புகழ்பெற்றது. 

பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் இந்த வசனத்தைக் கொண்டு கேலிசெய்யப்பட்டு வருகிறது. இவர் முறையே நயன்தாராவின் தந்தையாக கோலமவு கோகிலா படத்திலும், விவேக்கின் உதவியாளராக தாராள பிரபு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். சாய் பல்லவியின் கார்க்கி படத்திலும் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

எல்லிஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில்  1945 ல் வெளியான மீரா  உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய நடிகரும் தயாரிப்பாளருமான எம். ஆர். சந்தானத்தின் மகன்தான் ஆர். எஸ். சிவாஜி. இவரது சகோதரரான சந்தான பாரதியும் பிரபல நடிகராகவும்,  திரைப்பட இயக்குனரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்