Kanguva : மிரட்டும் பாபி டியோலின் உதிரன் கதாபாத்திரம்.. கங்குவா படக்குழு வெளியிட்ட மாஸ் போஸ்டர்!
நடிகர் பாபி டியோலின் பிறந்தநாளையொட்டி, ‘கங்குவா’ படத்தில் அவர் நடித்துள்ள ‘உதிரன்’ கதாபாத்திர போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இது தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். கங்குவா திரைப்படத்தின் டைட்டிலை, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. படத்தின் ஷூட்டிங் கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜூ தீவுகள், கேரளா, கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 23ஆம் தேதி இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது.