Thalapathy 69: ‘தளபதி 69’ -ல் விஜய்க்கு ஜோடியாக நானா? .. ‘ஹெச். வினோத் அப்பவே சொன்னார்’ - மஞ்சு வாரியர் சூசக பதில்!
Thalapathy 69: துணிவு படத்தின் முக்கியமான காட்சிகளை நான் நடித்துக்கொண்டிருந்த போது அந்தக்காட்சிகளை இன்னும் பெட்டராக நடிக்க நான் சில முயற்சிகளை செய்தேன். - மஞ்சு வாரியர்!

Thalapathy 69: ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்தத்திரைப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் மஞ்சு வாரியர் நடிகர் விஜயின் 69 வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இது குறித்து மஞ்சுவாரியர் சூரியன் எஃப் எம் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
தளபதி69 -ல் மஞ்சு வாரியரா?
இது குறித்து அவர் பேசும் போது, “துணிவு படத்தில் ஹெச். வினோத் உடன் பணியாற்றும் போது, முக்கியமான காட்சிகளை நான் நடித்துக்கொண்டிருந்த போது, அந்தக்காட்சிகளை இன்னும் பெட்டராக நடிக்க நான் சில முயற்சிகளை செய்தேன்.
ஆனால், அதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லி என்னை இயக்குநர் ஹெச். வினோத் தடுத்து, இந்தப்படத்திற்கு இது போதும் என்று சொன்னார். அத்துடன் நீங்கள் நன்றாக நடிப்பதற்கு வேறு படம் தருகிறேன்” என்று சொன்னார். இதன் மூலம் நடிகர் விஜயின் 69 வது படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக திரை வட்டாரம் கூறுகிறது.