Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண்-andhra deputy chief minister pawan kalyan congratulated actor karthi who spoke in controversy on tirupati laddu issue - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண்

Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண்

Marimuthu M HT Tamil
Sep 28, 2024 05:29 PM IST

Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண் குறித்து விரிவாக அறிந்துகொள்வோம்

Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண்
Laddu: கவனமாக பேசுங்க.. கலாசாரம் முக்கியம்.. லட்டு விவகாரத்தில் கார்த்தியை குட்டு வைத்து வாழ்த்திய பவன் கல்யாண்

இந்துக்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்திருக்கும் இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை ஆந்திர மாநில அரசு நியமித்துள்ளது.

இந்த விவகாரத்தில், கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், திருப்பதி வெங்கடேசப் பெருமாளிடம் மன்னிப்புக்கோரும் விதமாகவும், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாள்கள் விரதத்தைத் தொடங்கியுள்ளார்.

அதேபோல் திருப்பதி லட்டு விவகாரத்தில் கோயில் புனிதம் கெட்டுவிட்டதால், அதற்குப் பரிகாரமாக 3 நாட்கள் சிறப்பு யாகங்களையும் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்தது.

லட்டு குறித்து நடிகர் கார்த்தி பேசியது இதுதான்:

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘சத்யம் சுந்தரம்’(மெய்யழகன் படத்துக்கு தெலுங்கில் சூட்டிய பெயர்) பட நிகழ்ச்சியின்போது தொகுப்பாளர் நடிகர் கார்த்தியிடம்,சிறுத்தை படத்தில் வரும் கண்ணா லட்டு தின்ன ஆசையா என காமெடியாக நடிகர் கார்த்தி பேசும் காட்சியை மீம் ஆக மாற்றி. ‘லட்டு வேணுமா? இன்னொரு லட்டு வேணுமா சார்’ என நகைச்சுவையாகக் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த நடிகர் கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. இது சென்ஸிடிவ் ஆன டாப்பிக்காக தற்போது உள்ளது. எனவே, லட்டு தற்போது வேண்டாம்" என்று சிரித்தவாறே சொன்னார்.

தொகுப்பாளர் விடாமல், மோட்டசூர் லட்டு வேணுமா? என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த கார்த்தி, "லட்டு இப்போது வேண்டாம்" எனப் பதில் கூறினார்.

கொந்தளித்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்:

நடிகர் கார்த்தி பேசிய வீடியோ டோலிவுட்டில் வைரலான நிவையில், " லட்டு பற்றி பலருக்கு சிரிப்பாக உள்ளது. ஒரு சினிமா நிகழ்ச்சியில்கூட லட்டு, சென்சிட்டிவ் ஆன டாபிக் என ஹீரோ சொல்வதைப் பார்த்தேன்.

ஒருபோதும் யாரும் அப்படி பேசவேண்டாம். நான் அந்த ஹீரோவை ஒரு நல்ல நடிகராக மதிக்கிறேன். சனாதன தர்மத்தைப் பற்றி பொது இடத்தில் பேசுவதற்கு முன், ஒரு முறைக்கு நூறு முறையாவது சிந்திக்க வேண்டும்" என்று பவன் கல்யாண் காட்டமாகப் பேசினார்.

மன்னிப்புக்கேட்ட கார்த்தி:

இந்த விஷயம் சர்ச்சையாகியிருப்பதை உணர்ந்த நடிகர் கார்த்தி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நடிகர் கார்த்தி பகிர்ந்திருக்கும் பதிவில், ‘’மதிப்புக்குரிய பவன் கல்யாண் சார். நான் பேசியது தவறான புரிதலை ஏற்படுத்தியதற்கு ஆழ்ந்த மரியாதையுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பதி வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை பின்பற்றுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற தலைப்புகளை கவனமாகக் கையாளுங்கள்: பவன் கல்யாண்

அதைத்தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கார்த்திக்கு ரிப்ளே செய்திருக்கிறார்.

அதில், ‘’உங்கள் அன்பான மொழியையும் விரைவான பதிலையும், எங்கள் மரபுகளுக்கு நீங்கள் காட்டிய மரியாதையையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். திருப்பதி மற்றும் அதன் மதிப்புமிகு லட்டுகள் போன்ற நமது புனிதமான விஷயங்கள் மில்லியன் கணக்கான பக்தர்களுக்கு ஆழ்ந்த உணர்வுகளைக் கொண்டுள்ளன. மேலும் இதுபோன்ற தலைப்புகளை நாம் அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்.

எந்த நோக்கமும் இல்லாமல் இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். மேலும் நீங்கள் பேசியது தற்செயலானது என்பதைப் புரிந்துகொள்கிறேன்.

பொது நபர்களாகிய நமது பொறுப்பு என்பது, ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்ப்பது ஆகும். குறிப்பாக நாம் மிகவும் மதிக்கும் நமது கலாசாரம் மற்றும் ஆன்மிக விழுமியங்கள் ஆகியவை. சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில், இந்த விழுமியங்களை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம்.

அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் தொடர்ந்து நம் சினிமாவை வளப்படுத்திய ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக உங்கள் மீது எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மெய்யழகன்(சத்யம் சுந்தரம்) திரைப்படத்தின் முழு குழுவையும் படத்தின் வெற்றிகரமான வெளியீட்டிற்காக வாழ்த்துகிறேன். இது பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியைத் தரட்டும்.’’ என்றார், நடிகரும் ஆந்திர முதலமைச்சருமான பவன் கல்யாண்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.