கங்குவா படத்திற்காக சூர்யா எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்காரு தெரியுமா? பாபி தியோல், திஷா பதானி சம்பளம் இதுதான்!
கங்குவாவுக்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய விவரங்களும் வெளிவந்துள்ளன. கதாநாயகனாக நடித்த சூர்யா இப்படத்திற்காக பட்ஜெட்டில் 10 சதவீதத்துக்கும் மேல் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முடிவு கட்டும் விதமாக சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்ககத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் பீரியட் ஆக்ஷன் த்ரில்லர் படமான கங்குவா இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்படும் நிலையில், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் காலை 5 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு வெளிநாடுகளிலும் படம் முன்னரே வெளியாகியுள்ளது. இதையடுத்து ரூ. 350 கோடிபட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் சூர்யாவின் திரைப்படமான கங்குவா தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது. படத்தில் நாயகியாக திஷா பதானி, வில்லனாக அனிமல் புகழ் சன்னி தியோலும் நடித்துள்ளனர்.
ஐந்து கெட்அப்களில் சூர்யா
கங்குவா படத்தில் 1678ம் ஆண்டு போர் வீரன் கங்குவா, இன்றைய தலைமுறை இளைஞன் பிரான்சிஸ் என இரட்டை வேடத்தில் சூர்யா தனது ஈடு இணையற்ற நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். படத்தில் சூர்யா மொத்தம் ஐந்து கெட்அப்களில் சூர்யா தோன்றுகிறார் எனவும், இந்த கதாபாத்திரங்களுக்கு இடையே லுக், பாடிலாங்குவேஜ், நடிப்பு என அனைத்தும் ஈர்க்கும் விதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கங்குவா படம் சூர்யாவின் ஒன் மேன் ஷோவாக இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார் கங்குவா கேரக்டரில் சூர்யாவின் என்ட்ரி தெறிக்கவிடும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. கங்குவா உலகில் நுழைய இயக்குநர் சிவா சிறிது நேரம் எடுத்துக்கொண்டார் என்றாலும், அங்கு நுழைந்த பிறகு முழு படமும் வேறு லெவலில் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கங்குவாவுக்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம்
கங்குவாவுக்காக நடிகர்கள் வாங்கிய ஊதியம் பற்றிய விவரங்களும் வெளிவந்துள்ளன. கதாநாயகனாக நடித்த சூர்யா இப்படத்திற்காக ரூ.39 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். படத்தின் பட்ஜெட்டில் 10 சதவீதத்துக்கும் மேல் சூர்யாவின் சம்பளத்துக்கே சென்றது. வில்லனாக நடித்த பாபி தியோல் ரூ.5 கோடியும், திஷா பதானி ரூ.3 கோடியும் வாங்கியதாக கூறப்படுகிறது.
கங்குவா ஓடிடி ரிலீஸ் எப்போது?
ரூ. 350 கோடிபட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் கங்குவா பீரியட் வார் டிராமா என்பதால் நீண்ட நாட்களாக இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி, அமேசான் பிரைம் வீடியோ இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளது.
2 டி மற்றும் 3 டி வடிவங்களில் வெளியிடப்பட்ட கங்குவா திரையரங்குகளை விட்டு வெளியேறிய பிறகு பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பிரண்ட் பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது.
ஓடிடியில் கங்குவா படம் எப்போது வரும்?
வழக்கமாக தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குள் ஓடிடியில் நுழையும். இருப்பினும், கங்குவா போன்ற பெரிய பட்ஜெட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக, ஆறு வாரங்களுக்குப் பிறகுதான் படத்தை ஓடிடியில் கொண்டு வர ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, கங்குவா திரைப்படம் டிசம்பர் கடைசி வாரத்தில் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட வாய்ப்புள்ளது.
டாபிக்ஸ்