தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ilayaraja Visited Music Director Devi Sri Prasad Music Studio And Composer Shared Emotional Post

Devi Sri Prasad: ஸ்டுடியோவுக்கு இளையராஜா சர்ப்ரைஸ் விசிட்! வாழ்நாள் கனவு நனவானதாக தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 13, 2024 03:55 PM IST

இசைஞானி இளையராஜா தனது ஸ்டுடியோவுக்கு சர்ப்ரைஸாக வருகை புரிந்த நிலையில், என் வாழ்நாள் கனவு நனவானது என இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுடன் தனது ஸ்டுடியோவில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
இளையராஜாவுடன் தனது ஸ்டுடியோவில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா, விஷால் நடித்து வரும் ரத்னம் ஆகிய படங்களுக்க இசையமைத்து வருகிறார்.

இதையடுத்து சென்னையில் இருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவுக்கு இசைஞானி இளையராஜா சென்றுள்ளார். இதையடுத்து இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவரது வருகை குறித்து நெகிழ்ச்சியான அறிக்கையை என் வாழ்நாள் கனவு நனவானது என்று தனது எக்ஸ் பக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: " இசை என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்பே, ஒரு சிறுவனாக இளையராஜாவின் இசை என்னுள் மேஜிக்கை உருவாக்கியது.

நான் அவரது இசையை கேட்டுதான் வளர்ந்தேன். தேர்வுக்கு படிக்கும்போது கூட எப்போதும் இளையராஜாவின் இசை என்னை சுற்றியே இருக்கும். அவரது இசையில் என்னை முன்பும், இப்போதும், எப்போதும் பிரிக்க முடியாது. அவரது இசைதான் நான் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற விருப்பத்தை வளர்த்தது.

நான் இசையமைப்பாளர் ஆனதும் ஸ்டுடியோவை கட்டமைத்ததுடன், இளையராஜாவின் மிகப் பெரிய புகைப்படத்தை வைத்தேன். எனது மிகப் பெரிய வாழ்நாள் கணவாக ஒரு நாள் இளையராஜா எனது ஸ்டுடியோவுக்குள் வரவேண்டும் என்பது இருந்தது. அப்போது அவரது புகைபடத்துக்கு அருகில் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும்.

நியாயமான ஆசைகள் நிறைவேற இந்த பிரபஞ்சம் எப்போது வழிவிடும். அதன்படி இறுதியாக என் ஆசை நிறைவேறியுள்ளது.

உணர்ச்சி மிக்க தருணம்

அதுவும் எனது குருநாதர் மான்டலின் யு சீனிவாஸ் பிறந்தநாளன்று அது நிறைவேறியுள்ளது. வேறு என்ன நான் கேட்க இருக்கிறது. என் வாழ்நாளில் மிகவும் உணர்ச்சி மிக்க தருணம் இது.

உங்களது தெய்வீக இருப்பை எனது ஸ்டுடியோவுக்கும், என் குழுவினருக்கும் அளித்ததற்கு இசைக்கடவுள் இசைஞானி இளையராஜாவுக்கு நன்றிகள்.

எங்களை எப்போதும் ஊக்குவிப்பதற்கும், பாடம் கற்பிப்பதற்கும் நன்றிகள்.

இந்த தருணத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இசை நிறுவனங்கள், நண்பர்கள், குடும்பத்தினர், குழுவினர் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

புஷ்பா படத்துக்கு தேசிய விருது

தெலுங்கில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரிதாக பேசப்பட்டு, வசூலிலும் பட்டைய கிளப்பிய புஷ்பா படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதையடுத்து இந்த படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. இதன் மூலம் முதல் முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் தேசிய விருதை வென்றுள்ளார். இதுமட்டுமில்லாமல் சுமார் 10 முறை பிலிம் பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

புஷ்பா படத்தில் இடம்பெறும் ஏ சாமி, ஸ்ரீ வள்ளி ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானதுடன் இந்தியா முழுவதிலும் ஒலித்த பாடலாக இருந்தது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்துக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படம் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்