கொடுத்த ஹைப்புக்கு வொர்த்தா?.. ஃபான் இந்தியா ரிலிஸில் கெத்தா?.. ‘கங்குவா’ முதல் விமர்சனம் இதோ!
Kanguva Movie Review: ரசிகர்களின் பெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் இன்று (நவ.14) வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

சூர்யா நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் கங்குவா படம் இன்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஆக்ஷன் கலந்த பேண்டஸி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மிக பெரிய பொருள் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 11,500 திரைகளில் வெளியாகிள்ளது. எப்படியும் ரூ.2000 கோடி வசூல் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஃபான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருக்கும் கங்குவா படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
நிகழ்காலத்தில் இருக்கும் பிரான்சிஸிக்கு ஜூடா மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கே ஆரம்பிக்கிறது கங்குவாவின் கதை. ஐந்து தீவுகளில், பெருமாச்சி தீவின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் கங்குவாவுக்கும் அவனது குழுவுக்கும், போர்தான் குலத்தொழில்.