பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த பஞ்சாயத்து.. கதறி அழும் ஜாக்குலின்.. சூடு பிடித்த பிக்பாஸ்..
பெண்கள் அணியின் சார்பாக ஜாக்குலின் விளையாட சென்றால் அது டீமிற்கு நல்லதல்ல என சுனிதா ஜாக்குலினிடம் நேரடியாகவே கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த பஞ்சாயத்து.. கதறி அழும் ஜாக்குலின்.. சூடு பிடித்த பிக்பாஸ்..
பிக்பாஸ் சீசன் 8ன் முதல் நாள், முதல் எலிமினேஷ், அடுத்த வாரம் வெளியேறப் போகும் நபர்களுக்கான நாமினேஷன் என நேற்று பரபரப்பாக சென்றது. இதையடுத்து, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
முதல் டாஸ்க்
அதில், ஆண்கள் vs பெண்கள் என்ற போட்டியில், ஆண்கள் அணி சார்பாக விளையாட ஆண்கள் வீட்டிலிருந்து ஒரு நபர் பெண்கள் வீட்டிற்கும், பெண்கள் அணி சார்பாக விளையாட ஒரு நபர் ஆண்கள் வீட்டிற்கும் செல்ல வேண்டும் என போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் எந்த நபர் ஆண்கள் வீட்டிற்கும் பெண்கள் வீட்டிற்கும் செல்வார் என்பதை அந்தக் குழுவினர் தேர்வு செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.