தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: ‘எனக்கு பொழைக்கத்தெரியல.. நான் போறேன்.. - பிக்பாஸ் வீட்டில் இருந்து எகிறிய கூல் சுரேஷ்!

Bigg Boss 7 Tamil: ‘எனக்கு பொழைக்கத்தெரியல.. நான் போறேன்.. - பிக்பாஸ் வீட்டில் இருந்து எகிறிய கூல் சுரேஷ்!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 13, 2023 12:43 PM IST

பொறுமை இழந்த கூல் சுரேஷ், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி குதிக்க முயற்சி செய்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் அவரை கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்து பேசினார்.

பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7

ட்ரெண்டிங் செய்திகள்

பிக்பாஸ் வீட்டினுள் முதல் ஆளாக நுழைந்தவர் கூல் சுரேஷ். பெரிதாக யாரையும் பகைக்காத தன்மை, சண்டை என்றால் அமைதியாகி விடுவது, முடிந்த அளவு எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது உள்ளிட்ட அவரிடம் இருக்கும் குணங்கள், அவருக்கு அடுத்து வந்த போட்டியாளர்கள் வெளியே சென்ற போதும் கூட, அவருக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வாய்ப்பை தக்க வைத்துக்கொடுத்தது. 

சக போட்டியாளர்களும் ஆப்ஷன் இருக்கிறது என்றால், கூல் சுரேஷை நாமினேட் செய்வது கிடையாது. இதனால், கூல் சுரேஷ் அமைதியாக வீட்டினுள் உலா வந்து கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு 72 நாளை நிறைவு செய்த நிலையில், கூல் சுரேஷ் வீடு ஞாபகம் வருவதாக கூறியும், தன்னை வெளியே செல்ல வேண்டும்..  ஆகையால் அதிகபடியாக நாமினேட் செய்யும் படி புலம்பினார். ஆனால் யாரும் கேட்ட பாடில்லை. 

இந்த நிலையில் பொறுமை இழந்த கூல் சுரேஷ், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி குதிக்க முயற்சி செய்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் அவரை கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்து பேசினார்.

 

அவரிடம் பிக்பாஸ் ,கொஞ்சம் பொறுமையாக இருங்கள் இந்த நிகழ்ச்சி உங்களது வாழ்க்கைக்கு ஒரு நல்ல இடமாக அமையும். அதற்கு நீங்கள் இவ்வாறான முயற்சிகளை கையில் எடுக்கக் கூடாது; இப்படி நீங்கள் செய்தீர்கள் என்றால், இது உங்களை மட்டுமல்ல உங்களது குடும்பத்தாரையும் கடுமையாக பாதிக்கும்.

அவ்வளவு சங்கடமாக இருக்கிறது. அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றால் என்னை அழைத்திருக்கலாம் அல்லவா? என்று ஆறுதலாக பேசினார். இதனைக்கேட்ட கூல் சுரேஷ்.. எனக்கு பொழைக்கத் தெரியவில்லை என்று அழுதார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் அவரை சமாதானம் படுத்த, சாரி என்று கேட்டார் கூல் சுரேஷ்!

IPL_Entry_Point

டாபிக்ஸ்