போட்டியில் ஜெயித்தும் சந்தோஷம் இல்லாத பெண்கள் அணி.. நாமினேஷன் பாஸால் நடக்கும் குழப்பம்..
நாமினேஷன் ஃபிரி பாஸ் வென்ற பெண்கள் அணி, அதன் மூலம் எந்தப் போட்டியாளரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றாமல் தக்க வைக்க முடிவு செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டின் 3வது வாரத்தில் யார் வீட்டிலிருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாமினேஷன் ஃபிரி பாஸை வென்ற பெண்கள் அணிக்குள் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.
நாமினேஷன் பாஸ்
பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணி பெண்கள் அணி என பிரிந்து கேம்களை விளையாடி வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் நபர்களை அந்தந்த அணியினர் காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பாக நாமினேஷன் ஃபிரி பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் கேம்கள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற அணிக்கு இந்த பாஸ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற பெண்கள்
இந்த நாமினேஷன் பாஸ் வைத்திருக்கும் அணியினர், நாமினேஷன் பட்டியலில் இருக்கும் தங்கள் அணியினர் ஒருவரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பிக்பாஸ் 3வது வாரத்திற்கான நாமினேஷன் பாஸை பெண்கள் அணி வெற்றி பெற்றது. இதனால், பெண்கள் அணியினரால் அவர்கள் வீட்டில் இருந்த ஒரு நபரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற முடியும்.