தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7: என்னது இரண்டு டைட்டில் வின்னரா? - தூள் பறக்கும் புரமோஷன்

Bigg Boss 7: என்னது இரண்டு டைட்டில் வின்னரா? - தூள் பறக்கும் புரமோஷன்

Aarthi V HT Tamil
Sep 26, 2023 12:20 PM IST

பிக் பாஸ் தினமும் புது புது விதமான ப்ரோமோகளை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7

ட்ரெண்டிங் செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரு வீட்டாரை எப்படி கையாளப் போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இது தவிர பிக் பாஸ் வீட்டில் ஆண் குரல் மட்டுமே ஒலித்து வரும் நிலையில், இந்த சீசனில் லேடி பிக் பாஸ் குரலும் ஒலிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் தினமும் புது புது விதமான ப்ரோமோகளை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஜி.பி.முத்து நடித்த புது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் வழக்கம் போல் தனது டிரேட் மார்க் லெட்டர் வீடியோ பாணியில் ஜி.பி.முத்து அமர்ந்து இருக்கிரார். அதில், 2 வீடா என படித்ததும் ஷாக் ஆகி, ஒரு வீட்டையே சமாளிக்க முடியாது இதுல ரெண்டு வீடா என பேசி இருக்கிறார். அதுமட்டுமின்றி 2 வீடுனா இந்த முறை 2 டைட்டில் வின்னரா என்ற கேள்வியும், பிக் பாஸ் இரண்டு வீட்டிலும் பேசுவரா? கமல் ஹாசன் இரண்டு வீட்டாரை சேர்ந்தவர்களிடமும் பேசுவாரா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், இந்த சீசனில் உண்மையாக 2 டைட்டில் வின்னரா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்