தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigboss Season 7 Tamil: ‘மூக்க உடைப்பீங்களா’.. விஜய்க்கு கொந்தளித்து ஸ்ரைக் கார்டு கொடுத்த கமல்! - காரணம் என்ன?

Bigboss season 7 Tamil: ‘மூக்க உடைப்பீங்களா’.. விஜய்க்கு கொந்தளித்து ஸ்ரைக் கார்டு கொடுத்த கமல்! - காரணம் என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Oct 08, 2023 10:45 AM IST

விஜய் வர்மாவிற்கும் பிரதீப்பிற்கு நடந்த மோதலுக்கு விஜய் வர்மாவிற்கு கமல் ஸ்ரைக் கொடுத்து இருக்கிறார். அதற்கான காரணத்தை பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே ஒரு முறை, விஜய் வர்மாவை பிரதீப் கடந்து செல்லும் போது, அவரது கால் பிரதீப்பின் மீது பட்டு விட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு பிரதீப், எந்த விதமான பதிலையும் கொடுக்க வில்லை. 

இதில் கடுப்பான விஜய் வர்மா இந்த விஷயத்தை சபையில் எடுத்து வந்து பேசினார். அவர் பேசும் போது, “ பிரதீப் என்னை காலால் தட்டிவிட்டு சாரி கூட கேட்கவில்லை. அவர் இப்படி நடந்து கொள்ளும் பட்சத்தில், என்னுடைய முழுங்கையும் தெரியாமல் பட்டு விடும்..  மூக்கு உடையும்.. அப்புறம் கேடகக்கூடாது என்று எச்சரித்தார். 

மேலும், சில சமயங்களில் நீங்கள் பேசுவது சரியில்லை. நீங்கள் வெளியேதான் செல்ல வேண்டும். என்னுடைய நண்பர்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் உங்களை ஏதாவது செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்தார். 

அவர் அப்படி மிரட்டியதற்கு விஷ்ணு எதிர்ப்பு தெரிவித்து பேச, அவருக்கும், விஜய்க்கும் இடையே சண்டை மூண்டது. அதன் பின்னர் எல்லாரும், விஜய் வர்மா பேசியது தவறு சொல்ல, அவர் சாரி கேட்டார். இந்த சம்பவத்தை எடுத்துப்பேசி விஜய் வர்மாவை கண்டித்த கமல் அவருக்கு ஸ்ரைக் கார்டு கொடுத்து இருக்கிறார். மேலும், இந்த கார்டை நீங்கள் 3 முறை வாங்கும் பட்சத்தில், நீங்கள் வெளியே சென்று விடுவீர்கள் என்றும் எச்சரித்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்