உயிரோட விளையாடத.. ரஜினிக்காக கொதித்த மனைவி.. இதனால் தான் ட்விஸ்ட் நடந்ததாம்- புட்டு வைக்கும் பயில்வான்
ரஜினி உயிரோடு இருக்க வேண்டும் என்றால், ஐஸ்வர்யா தனுஷுடன் இணைந்து வாழ வேண்டும் என லதா ரஜினிகாந்த் வலியுறுத்தியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் படத்தில் நடித்து முடித்ததைத் தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் இயக்குநர் லோகஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வந்தார். அப்போது, அவர், தீடிரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்த நிலையில், சிகிச்சைக்குப் பின், இது சாதாரண சிகிச்சை தான். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என மருத்துவர்கள் கூறி, ரஜினி நலமுடன் உள்ளதாக அறிவித்தனர்.
ஐஸ்வர்யாவை கண்டித்த லதா
இதனால், ரசிகள் சந்தோஷத்தில் இருந்த நிலையில், நடிகர் ரஜினி காந்த் உடல்நிலை சீராக அவரது மனைவி லதா, மூத்த மகளிடம் சில நிபந்தனைகளை விதித்துள்ளாராம். அதாவது ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கணவர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வருவதாலே ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறதாம்.
அவருடைய சந்தோஷம் குறைவதால் உடல்நிலையும் அடிக்கடி குறைகிறதாம். இதனால், ரஜினி உயிருடன் இருப்பதற்காவது, ஐஸ்வர்யா அவரது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என லதா ரஜினிகாந்த் கூறியதால், அவர் தனுஷுடன் மீண்டும் இணைந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளாராம் என பயில்வான் ரங்கநாதன் கிங் 24X7 யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கும் தனுஷ்
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதை அடுத்து மேலும் இட்லி கடை என்ற மற்றொரு படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஷ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா என்ற இரு மகன்களும் உள்ளனர். இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இருவரும் மனம் ஒத்து பிரியப்போவதாக அறிவித்து இருந்தனர்.
பிரிந்தாலும் ஒன்றாகவே
இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்தாலும் தனது மகன்களின் பள்ளி நிகழ்வுகளுக்கு இருவரும் ஆஜர் ஆகி அவர்களை பிரிவு பாதிக்காத வண்ணம் வைத்து கொண்டனர். இந்நிலையில் பரஸ்பர முறையில் இருவரும் பிரிவதாக விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவர்கள் இருவரும் பிரிவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் இவர்களின் பிரிவினை தவிர்க்க இவர்களது நண்பர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அது எந்த வித பலனையும் அளிக்க வில்லை எனவும் தெரிய வந்தது. இருவரின் உறுதியான முடிவாக விவாகரத்து இருந்தது. இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி பரஸ்பரம் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
விசாரணைக்கு ஆஜராகாத ஐஸ்வர்யா
அவர்கள் அளித்த மனுவில், 'கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற எங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இவர்கள் தாக்கல் செய்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகாத காரணத்தால், வரும் அக்டோபர் 19 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததற்கு பயில்வான் கூறிய சம்பவம் தான் காரணமோ என கோலிவுட் வட்டாரத்தில் பலரும் பேசி வருகின்றனர்.