“இவனெல்லாம் ஹீரோவா? காத்து வாங்கிய ‘காதல் கொண்டேன்’; செத்த வீட்டுக்கு கூட அந்த தனுஷ் வரல”-பாலாஜி பிரபு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “இவனெல்லாம் ஹீரோவா? காத்து வாங்கிய ‘காதல் கொண்டேன்’; செத்த வீட்டுக்கு கூட அந்த தனுஷ் வரல”-பாலாஜி பிரபு

“இவனெல்லாம் ஹீரோவா? காத்து வாங்கிய ‘காதல் கொண்டேன்’; செத்த வீட்டுக்கு கூட அந்த தனுஷ் வரல”-பாலாஜி பிரபு

Kalyani Pandiyan S HT Tamil
Published Oct 06, 2024 08:17 AM IST

தனுஷ் ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்தும், இன்னபிற விஷயங்கள் குறித்தும் பாலாஜி பிரபு மனம் திறந்து பேசி இருக்கிறார்.

“காத்து வாங்கிய ‘காதல் கொண்டேன்’.. ஆபத்துக்காலத்தில் ஓடி வந்த அன்புள்ளம்.. செத்த வீட்டுக்கு கூட தனுஷ் வரல”-பாலாஜி பிரபு
“காத்து வாங்கிய ‘காதல் கொண்டேன்’.. ஆபத்துக்காலத்தில் ஓடி வந்த அன்புள்ளம்.. செத்த வீட்டுக்கு கூட தனுஷ் வரல”-பாலாஜி பிரபு

 

தனுஷ்
தனுஷ்

உடனே அப்பா எப்போது வேண்டுமென்றாலும் வாருங்கள் என்று சொல்ல, அன்று மாலையே கஸ்தூரிராஜா நடிகர் தனுஷ் செல்வராகவன், கஸ்தூரி ராஜா ஆகிய மூன்று பேரும் அப்பாவை பார்க்க வந்தனர். அப்போது கஸ்தூரிராஜா தற்போது ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம் படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் படத்திற்கான பின்னணி வேலைகளை நிறைவு செய்வதற்காக எங்களுக்கு ஒரு பத்து லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. அந்த 10 லட்சமும், தற்போது எங்களுக்கு முழுமையாக வேண்டும். நீங்கள் கடனாக தந்து உதவி செய்யுங்கள் என்றார். இதையடுத்து அப்பா முதலில் படத்தை பார்க்கலாம் என்று சொல்ல, அவருக்காக தனியாக ஒரு தியேட்டரில் படம் திரையிடப்பட்டது.

காதல் கொண்டேன்
காதல் கொண்டேன்

தனுஷ் ஹீரோவா?

படத்தை பார்த்த அப்பா தனுஷின் நடிப்பையும், செல்வராகவனின் இயக்கத்தையும் பார்த்து மிரண்டு போனார். குறிப்பாக பாடல்கள் எல்லாம் அவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது என்பதை அப்பொழுதே அவர்களிடம் சொல்லி, இந்தப்படத்திற்கு நான் பைனான்ஸ் செய்கிறேன் என்று ஒத்துக் கொண்டார்.

இதையடுத்து அப்போது பெரிய படங்களுக்கு பைனான்ஸ் செய்து கொண்டிருந்த பெரிய பைனான்சியர் ஒருவரை நாங்கள் சந்திக்க சென்றிருந்தோம். அவரிடம் சென்ற என்னுடைய அப்பா தற்போது காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தை பார்த்தேன். படம் அவ்வளவு பிரமாதமாக வந்திருக்கிறது. அதில் நடித்திருக்கும் தனுஷ் மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். நிச்சயம் இந்தப்படம் பெரிய ஹிட் ஆகும்.

உருவக்கேலி

தனுஷும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பெரிய இடத்தை நிச்சயம் அடைவார். ஆகையால், இந்தப்படத்திற்கு நாம் பைனான்ஸ் செய்து, அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை நாம் தயாரிக்கலாம் என்று கேட்டார். இதைக் கேட்ட அந்த பைனான்சியர், நீங்கள் பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்தவர்; உங்களுக்கு எப்படி இந்த பையனை வைத்து படம் எடுக்கலாம் என்று யோசனை வந்தது என்று எனக்கு தெரியவில்லை.

எனக்கு இதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்ல, இல்லை என்று மறுத்த அப்பா, நான் ஒரு டெக்னீசியனாக சொல்கிறேன். நிச்சயமாக அந்தப் பையன் பெரிய இடத்திற்கு வருவான் என்று சொன்னார். ஆனால், கடைசிவரை அந்த பைனான்சியர் தனுஷ் மீது நம்பிக்கை வைக்கவில்லை. மேலும் தனுஷ் உடம்பு குறித்தும் ஒரு தவறான கமெண்டை பதிவிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், அவர் பெரிய இடத்திற்கு வந்த பின்னர் நாம் அவரை கமிட் செய்து படம் எடுக்கலாம். ஆனால் இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதைடுயத்து நாங்கள் வந்து விட்டோம். இதையடுத்து கஸ்தூரிராஜாவிற்கு என்னுடைய அப்பா போன் செய்து சூழ்நிலையை விளக்கி இந்தப்படத்தை நம்மால் செய்ய முடியாது என்று சொல்ல, வேறு ஒரு தயாரிப்பாளர் கஸ்தூரிராஜாக்கு உதவி செய்து, அவர்களின் அடுத்த படத்தையும் கம்மி செய்து கொண்டார். அந்த திரைப்படம் தான் ‘திருடா திருடி’. அந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அடுத்த படத்தையும் அதே தயாரிப்பாளர் தயாரித்தார். அந்த திரைப்படம் தான் புதுக்கோட்டையில் இருந்து சரவணன். இப்படி ஆபத்து காலத்தில் உதவி செய்த அந்த தயாரிப்பாளர்கள் இறப்புக்கு கூட தனுஷ் செல்லவில்லை” என்று பேசினார்.