Parenting Tips : விவகாரத்து கோரும் பெற்றோரா? உங்கள் குழந்தைகளின் மனநிலையை அது எப்படி பாதிக்கிறது பாருங்கள்!

By Priyadarshini R
Mar 11, 2024

Hindustan Times
Tamil

விவகாரத்தின் போது அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்

ஒரு குழந்தையின் வலி மற்றும் மனவருத்தும் இரண்டுக்கும் இடம் கொடுக்க வேண்டும். இது வலியும், துக்கமும் நிறைந்த தருணம். எனவே குழந்தைகளை அவர்களின் வழியில் அதை கடக்க அனுமதிக்க வேண்டும்

சோகம், கோவம், குழப்பம், வலி என அவர்களின் உணர்வுகள் பல்வேறு வகைகளில் வெளிப்படும். அதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும்

இந்த விவாகரத்து அவர்களுக்கு எப்படி ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை கவனியுங்கள். அவர்கள் அதை உங்களுக்கு விளக்கிக் கூறாமலே புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்

அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு இடம் வேண்டும். அவர்கsள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ஒருமுறை பேசுவதோடு மட்டுமின்றி, அடிக்கடி அது மனம் நிறைந்த உரையாடலாக இருக்கலாம். அதற்கும் இடம்கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை தெரிந்துகொள்வது பெற்றோருக்கும் கடினமானதுதான். ஏனெனில், அது அவர்களுக்கு குற்றவுணர்வு அல்லது பொறுப்புணர்வு அல்லது அவர்கள் குழந்தையை பாதுகாக்க முடியாமல் போனது குறித்த அவர்களும் வருந்துவார்கள். 

இது நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதையும் பாதிக்கும். எனவே பெற்றோரும் அவர்களுக்கு தேவையான உணர்வு ரீதியான இடத்தை பெற்றுக்கொள்வது நல்லது. இதன்மூலம் அவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கும் உதவ முடியும்.

இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்