பெண்ணோடு சுத்தும் பையன்.. மன உளைச்சலில் மனோ.. பணம் கொட்டுது.. பாய்ண்டு கொடுத்து பேசிய பயில்வான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பெண்ணோடு சுத்தும் பையன்.. மன உளைச்சலில் மனோ.. பணம் கொட்டுது.. பாய்ண்டு கொடுத்து பேசிய பயில்வான்

பெண்ணோடு சுத்தும் பையன்.. மன உளைச்சலில் மனோ.. பணம் கொட்டுது.. பாய்ண்டு கொடுத்து பேசிய பயில்வான்

Malavica Natarajan HT Tamil
Oct 05, 2024 11:13 AM IST

பாடகர் மனோ தனது மகன்களால் மன உளைச்சலில் உள்ளார். இவர்களின் பிரச்சனயில் போலீசார் சொல்வது தான் உண்மை என பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

பெண்ணோடு சுத்தும் பையன்.. மன உளைச்சலில் மனோ.. பணம் கொட்டுது.. பாய்ண்டு கொடுத்து பேசிய பயில்வான்
பெண்ணோடு சுத்தும் பையன்.. மன உளைச்சலில் மனோ.. பணம் கொட்டுது.. பாய்ண்டு கொடுத்து பேசிய பயில்வான்

இதையடுத்து, மனோவின் மகன்களை சிலர் தாக்கியது போன்றும் வீடியோ வெளியானது. இந்த பிரச்சனை முடிவதற்குள், பாடகர் மனோவின் மனைவியை இருவர் தாக்கிய வீடியோவும் வெளியானது. இந்த விவகாரம் இன்றுவரை முடியாமல் உள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி உள்ளது.

இவர்கள் சொல்வது தான் உண்மை

பாடகர் மனோவின் மகன்கள் பிறரை தாக்கினார்களா அல்லது பிறரால் மனோவின் மகன்கள் தாக்கப்பட்டனரா என்றால் போலீஸ் என்ன சொல்கிறதோ அதுதான் உண்மை. அதுதான் எல்லா இடத்திலும் செல்லும். இதுபற்றி நான் போலீசிலும் விசாரித்து விட்டேன் என்றார்.

விளையாடப் போனவர்களை மனோவின் மகன்கள் அடித்ததில் அவர்களுக்கு தலையில் தையல்கள் போடும் அளவிற்கு சென்றது. இதனால், மனோவின் மகன்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அதனால் தான் இந்த விஷயம் இவ்வளவு பெரிதானது என போலீசார் கூறியிருந்தனராம்.

இளையராஜாவின் எடுபிடி

பாடகர் மனோ இளையராஜாகிட்ட எடுபிடி வேலை செய்து இவ்வளவு தூரம் முன்னேறி இருக்காரு. அவரு இஸ்லாமியரா இருந்தாலும், தன்னோட பேர மனோனு இளையராஜாவால மாத்தினாரு என பேசிய பயில்வான், அவருடைய மகன்களை திட்டி தீர்த்துள்ளார்.

எதுவும் இல்லாமல் இருந்த மனோ, தன்னோட உழைப்பால முன்னேறி இப்போ 4 பங்களா வைத்திருக்கிறார். சினிமா சூட்டிங்கிற்கும் வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். ஆனால், இந்த பணத்தை வைத்து, மனோவின் மகன்கள் குடித்து ஆட்டம் போடுகின்றனர். குடித்தால் அவர்களுக்கு நிதானம் இருப்பதில்லை. பலருடனும் இப்படி சண்டை போட்டு வருகின்றனர் என்றார்.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

மேலும், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு மாதிரி மகன்களை காப்பாற்ற மனோவின் மனைவி துடிக்கிறார். ஆனால் மனோ நியாயமானவர். அவருக்கு தன் மகன்கள் பற்றி தெரியும். அதனால் தான் இந்த விவகாரத்தில் அவர் இதுவரை வாய் திறந்து பேசவில்லை. அதுமட்டும் இல்லாமல், மிகுந்த மன உளைச்சலிலும் இருக்கார் என்கிறார்.

பெண்ணுடன் சுற்றிய மனோ மகன்

நான் திருச்சி சென்றிருந்தபோது, பாடகர் மனோவின் மகனை ஒரு பெண்ணுடன் பார்த்தேன். என்ன இங்க, யாரு இந்த பொன்னுன்னு கேட்டேன். அதற்கு இந்தப் பொன்னை லவ் பண்றேன். கல்யாணமும் பண்ணிக்கப்போறேன் என மனோவின் மகன் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

அதுமட்டும் இல்லாம, மனோவின் மனைவி ஜமீலா, தங்கள் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றதாக அளித்த புகாரில் தான் 2 பேர் கைது பண்ணிருக்காங்க. மனோவின் மகன்கள் தன்னை தாக்கியதாக கூறியவர்களுக்கு எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுதான் உண்மை எனக் கூறினார்.

மேலும், தொடர்ந்து பேசிய பயில்வான், பல மீடியாக்களில் நான் பேசாததை எல்லாம் கூறிவிட்டு, முகப்பு படத்தில் என்னுடைய போட்டோவை வைத்து விடுவதாக கூறி வருத்தம் தெரிவித்திருந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

Whats_app_banner