Bayilvan: இளையராஜாவின் எடுபிடி.. பாலசுப்ரமணியத்திற்கு மாற்றாக உருவான ஈட்டி; வாடகை மட்டுமே 1 கோடி!- மனோ மன்னன் ஆன கதை!
Bayilvan: “ஆரம்ப காலத்தில் மனோ இளையராஜாவிடம் எடுபிடியாக வேலை செய்து கொண்டிருந்தார். தன்னிடம் மனோ நேர்மையாக இருந்த விதத்தை பார்த்த ராஜாவுக்கு, அவரை மிகவும் பிடித்து விட்டது. -மனோ மன்னன் ஆன கதை!
கல்லூரி மாணவர்களை அடித்துவிட்டு தலைமறைவான பிரபல பாடகர் மனோ மகன்கள் குறித்தான வழக்கு பற்றி பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மெட்ரோ மெயில் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
எடுபிடியாக வேலை
இது குறித்து அவர் பேசும் போது, “ மனோ அடிப்படையில் ஒரு இஸ்லாமியர். சினிமாவிற்கு வந்த பின்னர்தான் அவர் தன்னுடைய பெயரை மனோ என்று மாற்றிக்கொண்டார். ஆரம்ப காலத்தில் மனோ இளையராஜாவிடம் எடுபிடியாக வேலை செய்து கொண்டிருந்தார். தன்னிடம் மனோ நேர்மையாக இருந்த விதத்தை பார்த்த ராஜாவுக்கு, அவரை மிகவும் பிடித்து விட்டது. இதையடுத்து அவரை பின்னணி பாடகர்களுடன் இணைத்து பாட்டு பாட வைத்தார் ராஜா.
அதன் பின்னர் அவரை ஒரு பாடகராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இளையராஜாவிற்கு வந்தது. அதற்கு காரணம் எஸ்.பி. பாலசுப்ரமணியம். ஆம், எஸ்.பி பாலசுப்பிரமணியம் நன்கு பிரபலமான காரணத்தினால், அடிக்கடி வெளிநாட்டு கச்சேரிகளுக்கு சென்று விடுவார். இதனால் இளையராஜாவால் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை, தான் நினைத்தபோதெல்லாம் தன்னுடைய பாடல்களில் பாட வைக்க முடியவில்லை. அந்தக் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு மாற்றாக, மனோவை அவர் உருவாக்கினார் இளையராஜா.
பின்னணிப் பாடகராக உருவெடுத்தார்
அதன் பின்னர் பல பாடல்களை பாடிய மனோ இடையில் நடிகராகவும் அறிமுகமானார். அதில் அவருக்கு நல்ல பிரபலம் கிடைத்த பொழுதும், அவர் பின்னணி பாடகராகவே தன்னுடைய கேரியரை அமைத்துக் கொண்டார். இன்று வளசரவாக்கத்தில் மனோவிற்கென்று நான்கு வீடுகள் இருக்கின்றன. அந்த வீடுகளில் இரண்டு வீடுகள் ஷூட்டிங்கிற்கு வாடகை விடப்படுகின்றன. அதன் மூலம் அவருக்கு கிடைக்கும் வாடகைப்பணமே கிட்டத்தட்ட ஒரு கோடி இருக்கும்.
மனோ ஏழையாக இருந்து இந்த இடத்திற்கு வந்தவர். அதனால் அவருக்கு பணத்தின் அருமை நன்றாகவே தெரியும். ஆனால் அவர்களது மகன்கள் அப்படி இல்லை. அவர்கள் பிறக்கும் போதே கொழிக்கும் செல்வத்தை பார்த்தவர்கள்.
காவல் அதிகாரி சொன்னது என்ன?
நான் இந்த வழக்கு தொடர்பாக காவல் அதிகாரி ஒருவரிடம் பேசினேன். அவர் என்னிடம் பேசும் பொழுது, இரவு 12 மணி அளவில் மனோவின் இரண்டு மகன்களும், அவர்களது வீட்டில் வேலை செய்பவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார்கள். மது அருந்தியதில் போதை தலைக்கேற, வாசலுக்கு வந்தவர்கள், தெருவில் சென்றவர்களை கூப்பிட்டு அடித்து அனுப்பி இருக்கிறார்கள்.
அப்போதுதான் கிரிக்கெட் விளையாடி விட்டு இந்த 4 வாலிபர்கள் வந்திருக்கிறார்கள். அதில் ஒருவரை அருகே அழைத்த மனோவின் மகன்கள், அந்த வாலிபர் கையில் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையை வாங்கி, அவரின் தலையில் அடித்திருக்கிறார்கள் இதில் அவனது மண்டை உடைந்து, தையல் போடும் நிலைக்கு சம்பவம் சென்று விட்டது. இதையடுத்து காவல்துறைக்கு விஷயம் தெரிய, மனோவின் மகன்கள் இரண்டு பேரும் தலைமுறைவாகி விட்டார்கள். வீட்டில் வேலை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது மனோவின் மகன்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அவர்கள் வந்து சரணடைந்தால் போலீசார் அடிதடி வழக்குக்கான அபராதத்தை மட்டும் விதித்து, எச்சரித்து அனுப்புவார்கள். ஆனால், அவர்கள் முன்ஜாமின் எடுத்தால் விவகாரம் பெரிய அளவுக்கு செல்லும். வழக்கு இழுத்துக் கொண்டிருக்கும். ” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்