Bayilvan: 50 வயசுக்கு அப்புறமும்.. மீண்டும் ரொமான்ஸ்.. அந்த நடிகை என்ன பண்ண போறாங்க? - பயில்வான்
Bayilvan: நடிகை வனிதா விஜயகுமார் 50 வயசுக்கு மேல கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறாங்க? என நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் கிண்டலடித்துள்ளார்.

நடிகை வனிதா ஏற்கனவே, 3 திருமணங்கள் செய்து 3 முறையும் விவாகரத்து பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று, save the date எனக் கூறி திருமண பத்திரிகை போன்று ஒரு பதிவையும் செய்துள்ளார். இதனால் வனிதாவிற்கு மீண்டும் திருமணம் நடைபெறுகிறதா என நெட்டிசன்கள் கிண்டலடித்த நிலையில், தற்போது பத்திரிகையாளர் பயில்வானும் கிண்டல் செய்துள்ளார்.
நடிகை வனிதா
தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமார்- மஞ்சுளாவின் தம்பசியின் மகள் தான் வனிதா விஜயகுமார். ஆனால் தற்போது தனது தந்தையுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.
விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். வனிதா விஜயகுமாரை பொறுத்தவரை அவர் நடிகையாக பிரபலமானதை விட, அவருடைய பர்சனல் பிரச்சினைகளின் வழியாகவே பிரபலம் அடைந்ததே அதிகம்.
