Bayilvan: கமல்ஹாசனை டம்மியாக்கிய டிவி.. மணிமேகலை தானாக போகல.. போகச்சொல்லிட்டாங்க: பயில்வான் ரங்கநாதன் பேட்டி-bayilvan ranganathan comments on kamal haasan dumbing down tv and host manimegalai - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: கமல்ஹாசனை டம்மியாக்கிய டிவி.. மணிமேகலை தானாக போகல.. போகச்சொல்லிட்டாங்க: பயில்வான் ரங்கநாதன் பேட்டி

Bayilvan: கமல்ஹாசனை டம்மியாக்கிய டிவி.. மணிமேகலை தானாக போகல.. போகச்சொல்லிட்டாங்க: பயில்வான் ரங்கநாதன் பேட்டி

Marimuthu M HT Tamil
Sep 23, 2024 02:34 PM IST

Bayilvan: கமல்ஹாசனை டம்மியாக்கிய டிவி குறித்தும், மணிமேகலை தானாக போகல என்றும், போகச் சொல்லிட்டாங்க எனவும் பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார்.

Bayilvan: கமல்ஹாசனை டம்மியாக்கிய டிவி.. மணிமேகலை தானாக போகல.. போகச்சொல்லிட்டாங்க: பயில்வான் ரங்கநாதன் பேட்டி
Bayilvan: கமல்ஹாசனை டம்மியாக்கிய டிவி.. மணிமேகலை தானாக போகல.. போகச்சொல்லிட்டாங்க: பயில்வான் ரங்கநாதன் பேட்டி

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கிங் 24*7 யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘’மணிமேகலை விஷயத்தில் விஜய் டிவிக்கு மிகச்சிறந்த விளம்பரம். ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியில் மணிமேகலை, பிரியங்கா இவர்கள் இரண்டுபேரில் பிரியங்கா தான் சீனியர்ன்னு செஃப் தாமுவே சொன்னார். இதற்கிடையே கொஞ்ச நாள்களில் கருத்து வேறுபாடு வந்திருச்சு. அப்போதுதான் செஃப் தாமு, நாங்கள் இந்த ஷோவுக்கு ஜட்ஜஸ் அப்படின்னு சொல்லி, பிரியங்காவை மடக்கினார்.

அதன்பின், செஃப் தாமு பிரியங்கா பற்றி விஜய் டிவியில், அவங்க கொஞ்சம் ஓவராகத் தான்போறாங்க அப்படின்னு சொல்லியிருக்கார். விஜய் டிவி அதை கண்டுக்கவே இல்லை. விஜய் டிவியை பொறுத்தவரை, தொகுப்பாளர்களில் யார் அதிகப் பார்வையாளர்களை கொண்டு வர்றாங்க அப்படின்னு மட்டும் தான் பார்க்கும். நிர்வாகம் லாபத்தைத் தான் பார்க்கும்.

சமைக்கத்தெரியாத பிரியங்கா குக் வித் கோமாளி போட்டியாளர்: பயில்வான்

பிரியங்காவுக்கு சமைக்க தெரியாது. ஆனால், பிக்பாஸ்லேயே கலந்துகிட்டார். அப்படி இருக்கிறவருக்கு, குக் வித் கோமாளியில் என்ன வேலை. அவங்களே என் அம்மா தான் வீட்டிலேயே சமைப்பாங்கன்னு சொல்லியிருக்காங்க. பிரியங்காவை பொறுத்தவரை, சினிமாவில் நடிக்குறதுமாதிரி, அந்த நிகழ்ச்சியில் நடிச்சுப்பேசி மக்களைக் கவர்றாங்க. அதனாலே, விஜய் டிவி பிரியங்காவை வைச்சிருக்காங்க. அதை யாரும் அசைக்கவும் முடியாது. இன்னிக்கு எல்லோர் வீட்டிலும் பிரியங்கா ஒரு ஆளாக இருப்பாங்க.

பிக்பாஸில் ஏன் கமல் வெளியே போனார் தெரியுமா. பிக்பாஸ் இன்ஸ்ட்ரெக்சன் கொடுத்து கமல்ஹாசன் நடக்கிறது மாதிரி ஆகிப்போய்ச்சு. அதற்கு முன்னாடி அப்படியில்லை, கமல்ஹாசன் வைத்ததுதான் சட்டம். அது அவருக்கு தெரிந்ததும் தான், அவர் வெளியேறினார். அவர் நினைச்சால் இருந்திருக்கலாம்ல. ஆனால், அசிங்கப்படுத்திட்டாங்க, அதனால் வேண்டாம்முன்னு தான் கமல்ஹாசன் பிக்பாஸில் இருந்து வெளியேறினார்.

கமல்ஹாசன் கருத்தை மதிக்காத முக்கிய டிவி: பயில்வான்

அதுமட்டுமில்ல, கமல்ஹாசன் பிக்பாஸில் இருந்த ஒரு போட்டியாளருக்கு சப்போர்ட் பண்ணுனார். அது விஜய் டிவி நிர்வாகத்துக்குப் பிடிக்கல.

எல்லோ நிறுவனங்களிலும் இது நடக்கும். பிரியங்கா விஜய் டிவியின் செல்லப்பிள்ளை. அவர்கள் சோசியல் மீடியாவில் பேசுவதையெல்லாம் கண்டுக்கிறமாட்டாங்க.

பிரியங்கா ஜெயிச்சுட்டு இருக்காங்க. அவர்கள் எதுக்கு மணிமேகலை லெவலுக்கு இறங்கிப் பேசணும்.

பிரியங்கா அங்கு ஆங்கராகப் போனாலும் போட்டியாளராகப் போனாலும் அவர்களுக்குத்தான் முக்கியம். பிரியங்கா இருக்கிறதால எல்லாம் பலபேர் வேற ஷோவுக்குப் போகல. ஆங்கர் பாவனா என்ன சொல்றாங்க என்றால், மும்பையில் இருக்கேன். இதைத்தாண்டி அடுத்தகட்டத்துக்குப் போறதுக்காகத் தான் நான் முயற்சி பண்ணுனேன். இன்னொரு முக்கியமான விஷயம், மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் என்பது தான் உண்மை. அவங்களாகத்தான் போ சொல்லியிருக்காங்க. விசாரிச்சவரைக்கும் அவர்களை நிகழ்ச்சியை விட்டு தூக்கியது உண்மைதான்.

மணிமேகலையின் டபுள் மீனிங்: கமல்ஹாசன்!

ஏற்கனவே இரண்டு நிகழ்ச்சிக்கு முன்னாடியே போய் மணிமேகலை பிரியங்கா செய்யிற திருகு வேலைகளை சொல்லியிருக்காங்க. அதற்கு விஜய் டிவி நிர்வாகம், நீயும் அப்படி போட்டிப்போடு முன்னாடி வான்னு தான் சொல்லியிருக்காங்க. சமரசப்பேச்சுக்கு விஜய் டிவி நிர்வாகம் ஒத்துக்கவே இல்லை. போறதாக இருந்தால் போமான்னு சொல்லிட்டாங்க.

பிரியங்கா டபுள் மீனிங்கில் பேசுறது அவங்க ஸ்டைல். டிவி நிகழ்ச்சியைப் பார்க்கிறவங்க அதை விரும்புறாங்க. அப்படி மணிமேகலை செய்யல. இரண்டுபேருக்கும் இடையில் போட்டியை உருவாக்குறதே விஜய் டிவி தான். எங்களுக்கு யாரு அதிக வியூஸ்களைக் கொண்டுவர்றாங்களோ, அவங்க தான் வேணும்னு சொல்லுது,விஜய் டிவி.

அந்த டிவியில் இருக்கிறவங்க மணிமேகலைக்கு சப்போர்ட் பண்ணினால், அவங்களும் வெளியே போக வேண்டிய நிர்பந்தம் வரும்.

இந்த சண்டைக்கோழி மணிமேகலையை இன்னொரு சேனலில் சேர்ப்பாங்களா என்பது கேள்விக்குறி. ஜெயிக்கிறவங்க, ஜெயிச்சவங்க, வாய் திறக்கவே மாட்டாங்க. போட்டின்னு வந்தால், நல்லா மணிமேகலை இறங்கி செய்திருக்கணும் இல்லையா’’ என முடித்தார், மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.

நன்றி: கிங் 24 x7 யூட்யூப் சேனல்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.