Bayilvan: ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்குக் காரணமான முக்கிய இயக்குநர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி-bayilvan ranganathan interviewed as the tamil director responsible for the jayam ravi aarthi seperation - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்குக் காரணமான முக்கிய இயக்குநர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

Bayilvan: ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்குக் காரணமான முக்கிய இயக்குநர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

Marimuthu M HT Tamil
Sep 10, 2024 09:18 AM IST

Bayilvan: ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்குக் காரணமான முக்கிய இயக்குநர் என பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார்.

Bayilvan: ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்குக் காரணமான முக்கிய இயக்குநர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி
Bayilvan: ஜெயம் ரவி - ஆர்த்தி பிரிவுக்குக் காரணமான முக்கிய இயக்குநர் - பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி

இந்நிலையில் நடிகரும் மூத்த சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஜெயம் ரவி ஆர்த்தியைப் பிரிந்ததற்கு உண்டான திரைமறைவு காரணத்தை மெட்ரோ மெயில் யூட்யூப் சேனலிடம் பகிர்கிறார். அதில், ‘’ஜெயம் ரவி விவாகரத்து உறுதி செய்யப்பட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் சமீபத்தில் ஒரு பதிவு போட்டாங்க ஆர்த்தி. காதல் என்பது வார்த்தை அல்ல. காதல் என்பது வாழ்க்கை. விவாகரத்து விவகாரத்தில் முற்றுப்புள்ளி விழுந்ததைப் பத்திரிகையிலேயே போட்டாங்க. விவாகரத்து அறிவிப்பு வெளியானவுடன், தனது சமூக வலைதளத்தில் ஜெயம் ரவியுடன் இருந்த அனைத்துப் படங்களையும் நீக்கிவிட்டார், ஆர்த்தி. அதில் திருமண புகைப்படங்களும் அடங்கும். அதே மாதிரி, ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆனதை வாழ்த்திப் போட்டப் பதிவினையும், ஆர்த்தி சமூகவலைதளங்களில் இருந்து நீக்கிட்டாங்க. முதலில் விவாகரத்து தம்பதியினருக்கு முன்னோட்டம் என்ன தெரியுமா? சமூக வலைதளத்தில் இருந்த கணவன் படத்தை நீக்கியது தான். அந்த வகையில் ஆர்த்தி வந்து ஜெயம் ரவியை விவாகரத்து செய்வதை உறுதி செய்திருக்கிறார்.

ஆர்த்தியின் குடும்பப் பின்னணி:

ஆர்த்தியின் குடும்பப் பின்னணியைப் பொறுத்தவரைப் பார்த்தால், ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார். அவர்களுக்கு வந்து கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கின்றன. இன்றைய சென்னை கோட்டையில் இருந்து கடற்கரை போகும் சாலையில் உள்ள இரண்டு பெரிய பங்களாக்களில் ஒன்று, கல்பனா ஹவுஸ். அந்த கல்பனா ஹவுஸ் தான், ஆர்த்தியினுடைய பாட்டி உடையது. ஆர்த்தியின் பாட்டியின் பெயர் தான், கல்பனா. அவர் வந்து மைசூர் மகாராஜாவான ஜே.எஸ்.சாம்ராஜ் உடையாரின் சென்னை மனைவி. அந்த கல்பனாவுக்குப் பிறந்தவர் தான், விஜயகுமார். விஜயகுமார் பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் ஜோடியாக நடித்தவர் தான், சுஜாதா. சுஜாதாவின் குடும்பமும் பெரிய பின்புலம் கொண்டது. அவரது அம்மாவும் பெரியம்மாவும் 70-களில் நடிகைகள். ஒரே ஒரு படத்தில் நடித்ததும் சுஜாதாவும் விஜயகுமாரும் காதலித்து, கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள்.

அவருடைய மகள் தான் ஆர்த்தி. அப்போது ஜெயம் ரவியும் ஆர்த்தியும் ஒரே காலேஜில் படிச்சிட்டு வந்தாங்க. அப்போது இரண்டுபேருக்குள்ளும் காதல் உருவாகிடுச்சு. ஜெயம் ரவி தன்னோட காதலை, தன் அப்பாவிடம் சொல்லும்போது, எடிட்டர் மோகன், பெண்ணோட பின்புலம் பெரிதாக இருப்பதைப் பார்த்துட்டு நம்ம பிள்ளையை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் என கல்யாணம் பண்ணிக்கொடுத்திட்டார். ஜெயம் ரவிக்கு இரண்டு பசங்க.

சமீபத்தில் ஜெயம் ரவி தொடர்ச்சியாக மாமியாரின் தயாரிப்பில் நான்கு படங்களில் நடித்தார். இதில் மூன்று படங்கள் சரியாகப் போகவில்லை. கடைசியாக நடித்தபடம் மட்டும் கொஞ்சம் லாபம் ஈட்டித் தந்தது.

இயக்குநரால் வந்த வினை:

இதனைத்தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ், ஜெயம் ரவியை வைத்துப் படமெடுக்க, சுஜாதா விஜயகுமாரிடம் கதை சொன்னார். படத்தின்கதை பிடித்துப்போக அதன் பட்ஜெட் ரூ.53 கோடி என முடிவு ஆனது. பாண்டிராஜும் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு போயுள்ளார். இப்படத்துக்கு சுஜாதா மருமகனிடம் சம்பளம் எவ்வளவு வேணும்னு கேட்டுருக்கார். அதற்கு ஜெயம் ரவி 20 கோடி ரூபாய் தரச்சொல்லியிருக்கார்.

அப்போது என்னங்க சம்பளம் இவ்வளவு கேட்குறீங்க அப்படின்னு இரண்டுபேருக்கும் இடையில் வாக்குவாதம் வந்திருக்கும்போல. பிறகு மருமகனுக்கு ரூ.20 கோடி கொடுக்க ஆசைப்பட்டுட்டு, இயக்குநர் பாண்டிராஜை அழைத்த சுஜாதா, பட்ஜெட்டை குறைக்கமுடியுமான்னு கேட்கிறாங்க. உடனே, பாண்டிராஜ் பட்ஜெட்டை எல்லாம் குறைக்கமுடியாது என்று சொல்லி, வாங்கிய அட்வான்ஸை அப்படியே திரும்பக்கொடுத்துவிட்டு, விஜய்சேதுபதிகிட்ட கதையைச் சொல்லி படத்தை ஆரம்பிச்சிட்டார்.

இப்படி ஜெயம் ரவிக்கு நல்ல படம் மிஸ்ஸான வருத்தம் இருக்கும் இல்லையா. அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி இந்த அளவுக்கு வந்துவிட்டது.

விவாகரத்துக்கு தனுஷ் காரணமா?:

ஒரு இரண்டு வருஷத்துக்கு முன்பு தனுஷ் ஆர்த்தி பேசியிருக்காங்க. இதனால், தனுஷூக்கும் ஜெயம் ரவிக்கும் தகராறு வந்திருக்கு. பின்னாடி, பேசி தீர்த்துருக்காங்க. ஆர்த்தி - ஜெயம் ரவி விவாகரத்தில், தனுஷ் உள்ளே போகவில்லை.

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி டைவர்ஸுக்குப் பின், ஆர்த்தியே குழந்தைகளை வளர்த்திருவாங்கன்னு நினைக்கிறேன். இருந்தாலும், அது குழந்தைகளின் விருப்பம் தான்.

ஜெயம் ரவிக்கும் பொன்னியின் செல்வன் கதாநாயகிக்கும் எல்லாம் எந்ததொடர்பும் கிடையாதுங்க. ஜெயம் ரவி மாமியார் விஷயத்தில் கெடுபிடி பண்ணாம இருந்திருக்கலாம். இவர் மட்டுமில்லாமல், அருண் விஜயை வைச்சு படமெடுத்து, அவரை திரைத்துறையில் நிலைநிறுத்தியது, அவரது மாமனார் தான். அருண் விஜய் அவரது மாமனாரை பகைக்கவில்லை தானே. அதுமாதிரி இவரும் முறைக்காமல் இருந்திருக்கலாம். எப்போதுமே அம்மாவுக்கு மகன் ஆதரவு கொடுக்கணும்.

சண்டையில் சுஜாதாவின் ஆதரவில் ரவி இருப்பதை ஆர்த்தி சொல்லியிருக்கலாம். ரவிக்கு சூடு, சொரணை எட்டிப்பார்த்து இருக்கலாம். சண்டை வந்திருக்கலாம். இதுதான் பிரிவுக்குக் காரணம்’’ என பயில்வான் ரங்கநாதன் சொல்லி முடித்தார்.

நன்றி: மெட்ரோ மெயில் யூட்யூப் சேனல்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.