Jayam Ravi: 'பிரியங்கா மோகனோட கியூட் ரியாக்ஷன்..’: விவாகரத்து அறிவிப்புக்குப்பின் முதன்முறையாக மேடையில் பேசிய ஜெயம் ரவி
Jayam Ravi: 'பிரியங்கா மோகனோட கியூட் ரியாக்ஷன்..’ என விவாகரத்து அறிவிப்புக்குப்பின் முதன்முறையாக மேடையில் பேசிய ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.
Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், ராவ் ரமேஷ் ஆகிய திரை நட்சத்திரங்கள் நடித்து, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து, இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கிய படம், பிரதர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தனது விவாகரத்து அறிவிப்புக்குப் பின், முதன்முறையாக நடிகர் ஜெயம் ரவி மேடையில் தோன்றி பேசினார்.
முன்னதாக, நடிகர் ஜெயம் ரவி தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கவிடுங்கள் எனவும், தனது விவாகரத்து விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள் என ஊடகத்தினரிடம் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.
நீங்கள் கொடுக்கிற எனர்ஜியில் தான் வண்டி ஓடுது: ஜெயம் ரவி!
அதன்பின் விழா மேடையில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, ‘’விழாவிற்கு வந்திருக்கும் எனது பிரதர் ஒவ்வொருவருத்தருக்கும் வணக்கம். நீங்கள் கொடுக்கும் எனர்ஜியில் தான் நம்ம வண்டி ஓடிட்டு இருக்குது. ஃபங்கஷன் முடியுற நிலைக்கு வந்தாலும்,நீங்க வந்தப்போ என்ன எனர்ஜி கொடுத்தீங்களோ அதே எனர்ஜி கொடுத்துட்டு இருக்கீங்க. என்னோட முதல் படத்தில் என்ன எனர்ஜி கொடுத்தீங்களோ, என்னோட கடைசி படம் வரைக்கும் அதே எனர்ஜி கொடுப்பீங்கன்னு எனக்குத்தெரியும். உங்கள் எல்லோரையும் ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
பிரதர் படத்தின் பாடல்கள் பிடிச்சிருந்துச்சா. நீங்கள் எல்லோரும் சொல்றதுக்கு முன்னாடி, முட்டி ஸ்டெப் ஆட வரல. சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த என் பையன் ஆரவ், என்னப்பா.. வயசாகிடுச்சா.. அப்படின்னு கேட்டான். தாங்கவே முடியல. ஒரு இரண்டு நாள் கழிச்சு, நல்லபடியா பண்ணுனேன். அதைப்பார்த்துட்டு, நீங்க செய்து காட்டுட்டீங்கன்னு போனான்.
பிரதர் படத்துக்கு டைட்டில் கொடுத்தது நான் தான்: ஜெயம் ரவி
முதல் படத்தில் உங்கள் எல்லோரையும் சந்தோஷப் படுத்திறதைத்தான் என்னோட முதல் வேலையாக செய்திட்டு இருக்கேன். இந்த சப்போர்ட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ஊடகத்தினருக்கு நன்றி. ராஜேஷ் சார் உண்மையிலேயே எனக்கு பிரதர். நான் தான் டைட்டில் கொடுத்தேன். என்னென்னமோ யோசிச்சு பார்த்தோம். குடும்பப் பாங்கான படம் இது. பிரதர்னு வைக்கலாம்ன்னு சொன்னேன். எல்லோரையும் பிரதர்னு தான் கூப்பிட்டுப்போம். டைரக்டர் சார், அவங்க டீமில் பிரதர் டைட்டில் வைக்கலாமான்னு கேட்டதுக்கு, எல்லோரும் ஓ.கே. சொல்லிட்டாங்க. அப்படியே வைச்சிட்டோம்.
அக்காவுக்கும் - தம்பிக்குமான ஒரு அழகான ஸ்டோரி. அந்த அக்கா பூமியை விட அழகாக இருக்க நம்ம பூமிகா அக்கா தான். பல வருஷமாக பார்த்திட்டு இருக்கோம். அழுக்காத முகம், அவங்களோட முகம். எப்போதுமே அந்தப் புன்னகை, அழகு இரண்டுமே இருக்கும் அவங்களுக்கு. என் ஃபிரெண்ட்ஸ்கள் கிட்ட பூமிகா அக்கா, எனக்கு அக்காவை நடிக்குறாங்கன்னு சொன்னதும், யாரு அக்கா அவங்கள அக்கா ஆக்கிடுவியான்னு கத்துனாங்க. இதே மாதிரி தான் எம்.குமரன் படத்தில் நதியா மேம்.. எனக்கு அம்மாவாக நடிக்கப்போறதா சொன்னதும் கத்துனாங்க. இந்தப் படத்தில் அவங்களோட ஃபெர்ஃபார்மான்ஸ் எக்ஸலண்டாக இருக்கும். நாங்க சூட்டிங் ஸ்பாட்டில் நிறைய பேசுவோம். அவங்களால் எனக்கு நிறைய அறிவு கிடைச்சது. அதற்கு நன்றி மேடம்.
(அப்போது மேடைக்கு ஜெயம் ரவியின் சொந்த அக்கா, விஜயலட்சுமி மேடையில் வந்து பிரதர் படக்குழுவினரை வாழ்த்தினார்).
அக்கா என்னோட ஃபிரெண்ட் - ஜெயம் ரவி
அப்போது அக்காவை மறைத்து வைக்கவில்லை. பாதுகாத்து வைச்சிருந்தோம். அக்கா வந்து எனக்கு சின்ன வயதில் இருந்து ஃபிரெண்ட் தான். பொம்மைக்கு அடிச்சிக்குவோம். அம்மா குடிச்ச, காபி டம்ளரில் காபி சாப்பிட மோதிக்குவோம். அதைத்தாண்டி, நல்ல ஃபிரெண்ட் அவங்க.
ராஜேஷ் சார் பேமிலியில் ஒருத்தர் மாதிரி தான். அவர் இரண்டு, மூணு தடவை கதை சொல்லியிருந்தார். அப்போது சார், எனக்கு ஃபேமிலி என்டர்டெயினர் ஆக இருக்கணும்னு சொன்னேன். முழு காமெடிப் படம் வேணாம்ன்னும் சொன்னேன். அப்போது பிரதர் படத்தோட, ஒன் லைன் சொன்னார். பிடிச்சிருந்துச்சு. அதை டெவலப் பண்ணி எடுத்துட்டு வந்தார்.
அவரை பொதுவாகவே, காமெடி படம் எடுக்கும் டைரக்டர்னு நினைக்குறோம். அவரோட எஸ்.எம்.எஸ். படத்தை எடுத்துக்கிட்டோம் என்றால், அது எமோஷனல் ட்ராமா. இளம்பெண்ணுக்கும் இளைஞருக்கும் இடையில் இருக்கும் ஈகோ கிளாஸை எடுத்திருப்பார். அழகா கொடுத்திருப்பார். பாஸ் என்கிற பாஸ்கரனில் முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரைக்கும் ஒருத்தன் மாறவே மாட்டான். அது புதுசாக இருந்துச்சு. இந்தப் படம், அந்த மாதிரி வரிசையில் வரும். நல்லா வரும்னு தோணுச்சு.
ஹாரிஸ் ஜெயராஜ் சார் கூட வொர்க் பண்ணுனது சந்தோஷமாக இருக்கு. பிரதர் படத்தில், அவர் இசையமைத்த ’மகாமிஷி’ பாடல் வாழ்க்கையில் எனக்கு மறக்கமுடியாத பாடலாக இருக்கும்.
பிரியங்கா மோகனோட கியூட் ரியாக்ஷன் - ஜெயம் ரவி!
எனது அண்ணன் இயக்குநராக வருவதற்கு முன்பே, அவரோட குறும்படம் பார்த்துட்டு, நல்ல இயக்குநராக வருவார்னு ஹாரிஸ் ஜெயராஜ் சார் சொன்னார்.
பிரியங்கா மோகனோட கியூட் ரியாக்ஷன், இந்தப் படத்தில் நிறைய இருக்கு. அவங்க அலும்பு பண்றது ஜாலியாக இருக்கும். ஒன்றாக ஃபுட் பால் மேட்ச் ஊட்டியில் பார்த்திருக்கிறோம்.
சரண்யா மேம், ஒரு சின்ன ஷாட்டாக இருந்தாலும், அதற்கு தயாராகி, ஒரு ஜென் மனநிலையில் அதை நடிச்சுக்காட்டுவாங்க. மேக்கப் பேக் வைச்சிக்கிறமாட்டாங்க. அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். சுந்தர் சார், எவ்வளவோ பிரச்னைகள் ஒரு சில படங்களில் வந்திருக்கு. அதையெல்லாம் சமாளிச்சிருக்கோம். அவரோட எல்லாப்படங்களும் நன்றாக வரணும். அடுத்து, மூன்றாவது படமும் நாம் சேர்ந்து செய்யணும்.
நட்டி சார், என் படத்தில் இருந்தால் அவர் வில்லனா, காமெடி பண்ணியிருப்பாரான்னு ஜனங்க யோசிப்பாங்க. அது அரிதாக கிடைக்கிற விஷயம். தயவு செய்து அதை எங்களுக்குக் கத்துக்கொடுங்க. ராவ் ரமேஷ் சார், ஆந்திராவில் பெரிய நடிகர். தெலுங்கு கொஞ்சம் தெரியும். அவர்கிட்ட பேசலாம்னு நினைக்கும்போது தமிழில் பேசினார். அடுத்துதான் சொன்னார், நான் இங்க பிறந்த பையன்னு சொன்னார். அவரோட தமிழ் உச்சரிப்பு அழகாக இருந்துச்சு. விடிவி கணேஷ் சார், ஒன்னு படம் முழுக்க பண்ணி வைச்சிருக்கார். இந்த விழாவில் எல்லோருக்கும் நன்றி கூறிக்குறேன்''என்றார், நடிகர் ஜெயம் ரவி.